Mangai Sadam Recipe (Photo Credit: YouTube)

பிப்ரவரி 27, சென்னை (Kitchen Tips): மாங்காய் என்றால் சிலருக்கு அலாதி பிரியம். பொதுவாகவே மாங்காயில் ஊறுகாய், வற்றல் போன்றவை செய்வோம். இதை நாம் சாம்பார், புளி குழம்பு, மீன் குழம்பு போன்றவற்றிலும் சேர்ப்பது வழக்கம். ஆனால், மாங்காயில் அதிகமாக சாதம் செய்ய மாட்டோம். மாங்காய் மற்றும் மாம்பழம் எவ்வளவு அதிகமாக சாப்பிட்டாலும் அதில் கலோரிகள் குறைவாக உள்ளதால் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும். மாங்காய் சாப்பிட பிடிக்காத குழந்தைகளுக்கு எளிய முறையில் சத்தான சுவையான மாங்காய் சாதம் செய்து கொடுக்கலாம். அப்படிப்பட்ட மாங்காய் சாதம் (Mango Rice) எப்படி செய்வது என்பதை இதில் பார்க்கலாம். Peas Kachori Recipe: சுவையான பட்டாணி கசோரி செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்:

வடித்த சாதம் - 1 கப்

மாங்காய் - 1

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 4

தேங்காய் துருவல் - 4 மேசைக்கரண்டி

முந்திரிப்பருப்பு - 1 மேசைக்கரண்டி

பெருங்காயத்தூள் - கால் மேசைக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 2 கரண்டி

கடலைப்பருப்பு - 1 கரண்டி

கடுகு - அரை தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் மாங்காயை தண்ணீரில் நன்றாக கழுவி சிறு துண்டுகளாக வெட்டியோ அல்லது மாங்காயை துருவியோ எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, முந்திரி பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். இப்போது நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
  • இதனையடுத்து, மாங்காய் துண்டுகள் அல்லது மாங்காய் துருவலை சேர்த்து நன்றாக வதக்கவும். அதனுடன் தேங்காய் துருவல் மற்றும் கருவேப்பிலை சேர்த்து கிளறிவிடவும்.
  • இறுதியாக, இதில் வடித்து வைத்த உதிரியான சாதத்தை கலந்து பரிமாறினால் குழந்தைகளுக்கு பிடித்த சுவையான மாங்காய் சாதம் ரெடி.