நவம்பர் 07, புதுடெல்லி (Agriculture Tips): விவசாயத்தில் அதிக மகசூலை இயற்கை முறையில் பெற மீன் அமினோ அமிலம் (Fish Amino Acid) சிறந்த முறையாக உள்ளது. இதை விவசாயிகளே தயார் செய்து பயிர்களுக்கு தெளிக்கலாம். இது பயிர்களுக்கு ஊட்டமளித்து செழிப்பாக வளர வைக்கிறது.
தேவையான பொருட்கள்:
மீன் கழிவுகள் (செதில் ,குடல், தலை, மீன் வால்)
நாட்டு சர்க்கரை Infant Protection Day 2024: குழந்தை பாதுகாப்பு தினம்.. உங்கள் குழந்தைகள் பாதுகாப்புக்கு இது கட்டாயம்.!
செய்முறை: ஒரு கிலோ நாட்டு சர்க்கரையையும், ஒரு கிலோ மீன் கழிவுகளையும் ஒரு வாளியில் போட்டு நன்றாக கலந்து காற்று புகாதவாறு மூடி வைக்க வேண்டும். வெப்பம் இல்லாத நிழலான பகுதியில் வைக்க வேண்டும். 30 - 40 நாட்களுக்கு பிறகு திறக்கையில் தேன் போன்ற திரவமாக மாறியிருக்கும். மீன் கழிவுகள் அடியில் தங்கியிருக்கும். கெட்டுபோன வாடை வீசாது. மாறாக பழவாடை வீசும் அப்படியெனில் மீன் அமிலம் தயாராகிவிட்டது.
இந்த தயாரான மீன் அமினோ அமிலத்தை 200 மி எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களில் தெளிக்கலாம். ஒரு முறை தயார் செய்யப்படும் இந்த அமிலத்தை 6 மாதம் வரை பயன்படுத்தலாம்.