Agriculture (Photo Credit: Pixabay)

மார்ச் 03, சென்னை (Chennai News): வேளாண்மையில் எப்போதும் அதன் நுட்பங்கள் அறிந்து முறையாக செய்தால் ஒரு லாபகரமான தொழிலாக இருக்கும். ஆனால் சரிவர மகசூல் செய்யாமல் பயிர் செய்தால் அதுவே அதள பாதாளத்தில் தள்ளி விடும். சுயதொழிலில் உள்ளது போல விவசாயத்திலும் அதிக ரிஸ்க்குகள் உள்ளது. விவசாயத்தை புதிதாக தொடங்க நினைப்பவர்கள், சில விஷயங்களை கவனமாக கையாளுவதன் மூலம் வெற்றிகரமான விவசாயத்தை மேற்கொள்ள முடியும். First Night Tips: தாம்பத்ய வாழ்க்கை இனிக்க.. மெல்ல மெல்ல தொடுங்கள்...!

இயற்கை வேளாண்மை:

விவசாய தொழிலை குறைந்த முதலீட்டில் ஆரம்பிப்பதே சிறந்தது. ஆரம்பத்தில் அதிக அனுபவம் இருக்காது அதனால் அதிக ரிஸ்க் எடுக்க கூடாது. அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க பயிர் செய்யும் இடத்தையும் முதலீட்டையும் அதிகப்படுத்தலாம். விவசாயம் செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு முதலீடு தேவைப்படும். அதற்காக கடன் வாங்குவார்கள். விவசாயத்தை நம்பி அதிக கடன்கள் வாங்க கூடாது. அதிலும் குறுகிய கால பணப்பயிர், விரைவில் கடன் அடைத்து விடலாம் என்று நினைத்து அதிக வட்டிக்கு கடன்கள் வாங்கி விவசாயம் மேற்கொள்ள கூடாது. மேலும் இது அதிக வட்டி லாபத்தை பெற்று தராது. விவசாய நிலம் வாங்கி வேளாண்மை செய்ய நினைப்பவர்கள், நிலத்தை வாங்குவதற்கு அதிக முதலீடு செய்யாமல், தேவைகேற்ப விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிர் செய்யலாம். இது ஆரம்பத்தில் ஏற்படும் செலவைக் குறைக்கும்.

தொடக்கத்தில் அனுபவம் வாய்ந்த விவசாயிகளின் வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும். விளைவிக்க போகும் பயிர்களின் சிறப்பியல்புகள், அவை வளர்வதற்கு தேவையான சத்துக்கள், நோய் மற்றும் பூச்சி தாக்குதல் போன்றவற்றையும் முன்பே அறிந்து கொள்ள வேண்டும். பயிர்களுக்கு தேவையானவையை சரியான நேரத்தில் அளிக்க வேண்டும். இதுவே நல்ல விவசாயத்திற்கு வழிவகுக்கும். விவசாயிகள் பலரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் சிறந்த பயிரை தேர்ந்தெடுத்து, பயிர் செய்யலாம். மேலும் மதிப்பு கூட்டும் பயிர்களைத் தேர்ந்தெடுத்து விவசாயம் செய்யலாம். இது முதலீட்டிற்கு நஷ்டம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். விவசாயத்தில் லாபம் கிடைக்காவிடினும் நஷ்டம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மிக அவசியம். ஒரே பயிரை மட்டும் நம்பாமல், வயலில் பிரித்து பிரித்து பல பயிர்களை போட்டு விவசாயம் செய்யலாம். குறுகிய கால பயிராக இருந்தால் அனுபவங்களை வேகமாக பெற்றுக் கொள்ளலாம். மேலும் ரிக்ஸ்கும் குறைவும். வருடக்கணக்கில் பயிர்களை வளர்த்து பின் அது பலன் தராது என்று தெரியும் போது முதலீடும் காலமும் வீணாகிவிடும்.

பல இளம் தலைமுறையினர், நல்ல சம்பளத்தில் இருக்கும் வேலையை விட்டு விட்டு விவசாயத்தில் இறங்குகிறார்கள். சிறுவயதிலிருந்து அனுபவம் உள்ளவர்களும் கூட அவ்வப்போது விவசாயத்தில் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். அதனால் வேறு வருமானம் இல்லாமல் விவசாயத்தை புதிதாக தொடங்க வேண்டாம். பகுதி நேரமாக தொடங்கி விவசாயத்தில் ஓரளவிற்கு கைதேர்ந்த பின் பெரிய அளவிலும் முழு நேரமாகவும் செய்யலாம். அதோடு விவசாயம் செய்யும் போது வீட்டிற்கு மற்றும் வேளாண்மைக்கும் தனித்தனியாக வரவு செலவு கணக்குகளை கவனித்து வர வேண்டும். விவசாயத்திற்கு செய்யும் செலவுகளை கண்காணிப்பது லாப நஷ்ட கணக்கை நிர்ணயம் செய்யும். விவசாய தளங்களையும் செய்திகளை அறிந்திருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் பல்வேறு மானியம், உதவி தொகைகளை அளித்தும் வருகிறது. மேலும் வேளாண்மை அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதும் விவசாயத்தை மேம்படுத்த உதவும். செடி வளர்ப்பதில் ஆர்வம் உள்ளது என்பது மட்டுமே விவசாயத் தொழிலை தொடங்குவதற்கான தகுதியாக இருக்க முடியாது. விவசாயம் செய்வதற்கு உடல் உழைப்பையும் நேரத்தையும் செலவிட வேண்டும். மேலும் எவ்வளவு அனுபவத்தை தானாகவும், பிறரிடமிருந்து கற்றுக் கொள்கிறோமோ அதற்கு ஏற்ப விவசாயத்தில் வெற்றி பெற முடியும்.