Spinach (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 13, சென்னை (Chennai News): தினமும் உணவில் ஏதாவது ஒரு கீரையை கண்டிப்பாக சேர்க்க வேண்டும். கீரையில் அதிகளவு வைட்டமின்கள், தாதுக்கள் இருப்பதால் இது உடலை ஆரோக்கியத்துடன் வைக்க உதவுகிறது. எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் மரணம் உண்டாக்கும் பல நோய்களுக்கு எதிராக இருந்து உடலின் ஆரோக்கியத்திற்கு காக்க வழிவகுக்கிறது. மேலும் கீரைகளை மண்ணிலிருந்து எடுத்த உடனேயே சமைப்பதால் அதிக நன்மைகளும் விளைகிறது.

பெரும்பான்மையாக முருங்கை, அரைக்கீரை, சிறுகீரை போன்ற ஒரு சில கீரை வகைகளே நமக்கு தெரியும் அதை மட்டும் தான் உணவில் சேர்த்துக் கொள்கிறோம். ஆனால் பல கீரை வகைகள் மருத்துவ குணங்களுடனும் இருக்கின்றன. இவைகளை மூலிகை செடிகள் எனக் குறிப்பிடுவதால் ஏதே காடுகளிலும், மலைகளிலும் மட்டும் தான் கிடைக்கும் என்ற தவறான கருத்தும் நிலவி வருகிறது. இந்த கீரைகள் சாலையோரங்களில் வேலிகளிலும் காணப்படும். இவைகளை வீட்டிலேயே எளிய முறைகளில் வளர்க்கவும் முடியும். இதில் பல கீரைகள் நாம் சாலையோரங்களில் பார்த்திருப்போம். ஆனால் பெயர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இது போன்ற கீரைகளை பற்றி காண்போம். Happy Hug Day 2025: அரவணைப்பு நாள்.. கட்டிப்பிடி வைத்தியத்தால் அதிகரிக்கும் காதல் ஹார்மோன்..!

மூக்கிரட்டை கீரை:

சாரணைக் கொடி, சாரணத்தி என்ற பெயர்களில் மூக்கிரட்டை கீரை அழைக்கப்படுகிறது. இது புற்கள் அதிகம் வளர்ந்துள்ள இடங்களில் கொடி போலப் படர்ந்து காணப்படும். இதை சமைத்து சாப்பிடுவதால் ஈறுகள் மற்றும் பற்களில் வலு பெறும். மேலும் பித்த நீர் சுரப்பையும் ஊக்குவிக்கிறது. இந்த கீரையையும் அதன் வேர்களையும் நன்கு காயவைத்து, பொடி செய்து நீரில் வேக வைத்து குடிக்கலாம். இது ரத்தத்தை சுத்தம் செய்கிறது. தொடர்ச்சியாக சாப்பிடுவதால் மூல பிரச்சனைக் குணமாகும்.

பொடுதலை கீரை:

அதிக துவர்ப்பு தன்மை உடைய இந்த பொடுதலை கீரை சிறிய செடி போலவும் கொடு போல படர்ந்தும் இருக்கும். இதை பொறுதலை, பூற்சாதம் என்றும் அழைப்பர். இது வெப்பத்தன்மை கொண்டது. இதன் இலைகளை அரைத்து தலைவலி உள்ள இடத்தில் பற்று போட்டால் மைகிரைன் என்னும் ஒற்றைத் தலைவலியைக் குணமாக்குகிறது. மேலும் டிலையையும் பொடியையும் காய் வைத்து அரித்து தலைக்கு தேய்த்து குளித்து வர தலையில் பொடுகுத்தொல்லை நீங்கும். இப்பொடியை அரைத்து குடித்துவர வயிறு கோளாறுகள் குணமாகும். இது கருப்பை, சீதபேதிக்கும் நன்மை பயக்கும்.

தவசிக் கீரை:

சற்று அரிதாக கிடைக்கும் தவசிக்கீரையில் நார்ச்சத்து, புரதச்சத்து, மாவுசத்து, நீர்சத்துக்கள் போன்ற சத்துக்களும், பொட்டாசியம், சுண்ணாம்பு, இரும்பு, மாங்கனீசு, பாஸ்பரஸ் போன்ற தாது பொருட்களும் அதிகளவு உள்ளது. இந்த கீரை உடல் வளர்ச்சியையும், எலும்புகள் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. மேலும் வயதானவர்களுக்கு கால்சியத்தை அதிகரித்து, எலும்பு மற்றும் பார்வையை வலுவேற்றுகிறது.மேலும் ஹிமோகுளோபின் அதிகரித்து நரம்பு தளர்ச்சி மற்றும் ரத்தசோகை நீக்கும். இதன் இலைகளிலிருந்து சாறு எடுத்து தேன்கலந்து அருந்தலாம். தோல் சுருங்காமல் பளபளப்பாக்கும்.

அம்மான்பச்சை கீரை:

காடுகளில் அதிகம் கிடைக்கும் இந்த அம்மான் பச்சைகீரை அல்லது அம்மான் பச்சரிசி கீரை என்றழைக்கப்படும் இக்கீரை, தரையில் படர்ந்து செடியாக வளரும். தாய்பால் சுரப்பை இயற்கையாகவே அதிகரிக்கும். ஆண், பெண் இருவரின் மலட்டுத்தன்மையை போக்குகிறது. விந்தணுக்களின் வீரியம் மற்றும் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.மேலும் சலி, இருமல், தும்மல், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகல், இளைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு ஏற்ற மருந்தாகும். பெண்களுக்கு வெள்லைபடுதல் பிரச்சனையை குணப்படுத்துகிறது.

நத்தைச் சூரி கீரை:

செடிகளுக்கு இடையில் கலை செடியாக இந்த சூரி கீரை அதிகம் காணப்படும். நத்தை சூரி என்றழைக்கப்படும் இது மாக மூலிகை என அழைக்கப்படுகிறது. இதில் பாஸ்பரஸ், கால்சியம் போன்றவை உள்ளதால் எலும்பு தொடர்பான நோய்களைக் குணப்படுத்துகிறது. இது லேசாஅக் வறுத்து அரைத்து பெடி செய்து பாலில் கலந்து இருவேளை குடிக்கலாம். உடல் சூட்டைக் குறைக்கிறது. சிறுநீரகக் கல் அடைப்பை சரி செய்கிரது. மற்றும் தாய்ப்பாலை பெருக்குகிறது.

வேளைக் கீரை:

வேளாக்கீரை, நல்வேளைக் கீரை என அழைக்கப்படும் இக்கீரை சித்த மருத்துவத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த கீரையில் சிறிது மிளகு, மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்துவிடும். இதன் இலைகளுடன் சீரகம் சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். மேலும் வாத நோய், கல்லீரல் வீக்கம், காதுவலி, நெஞ்சுவலி, வாயுக்கோளாறு போன்றவைகளுக்கு ஏற்றது. வீட்டைச் சுற்றி வளரும்இந்த மூலிகையை களை செடிகளாக எடுத்துவிடுவோம்.

குமுட்டிக்கீரை:

கிராமங்களில் அதிகளவு காணப்படும் இந்த குமட்டி கீரை பூக்கள் சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் அதன் நிலங்களுக்கேற்ப நிறத்தில் காணப்படும். இது செரிமானம், மலச்சிக்கல், பித்தம், மூலம் என முழு சீரணமண்டலத்தையும் காக்கிறது. இது காய்ச்சல், மற்றும் நோய்த் தொற்றுகளை நீக்குகிறது. நீர்ச் சத்துடைய இது உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றுகிறது. ரத்தத்தை சுத்தம் செய்கிறது. பக்குவமான சமைத்தல் அவசியமாகும்.

துத்தி கீரை:

வேலிகளில் கானப்படும் துத்திஇலை கீரை மஞ்சள் பூவிடன் சிறிய விதைகளைக் கொண்டுக் காணப்படும். இலையை தண்ணீர் விட்டு அரைத்து அதில் வாய் கொப்பளித்தால் பற்கள் ஈறுகள் வலிபெறும். இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து உடலிற்கு ஒத்தடம் வைத்தால் உடல் வலி நீங்கும். மேலும் இது வயிற்றுபுழுக்க நீக்கவும், நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் இந்த துத்தி பயன்படுகிறது. மூளையில் ஏற்படும் புற்று நோய் செல்களை அழிக்கும் சக்தியும் இதில் உள்ளது. மன பதற்றம், ஒவ்வாமை, ஆஸ்துமா, சிறுநீர் அடைப்பு போன்ற நோய்களுக்கு தீர்வாக இருக்கிறது. குளிக்கும் நீரில் இந்த இலை போட்டு குளிக்கலாம். துத்திப்பொடியாக கடைகளில் கிடைக்கிறது.

ஆரோக்கியத்திற்கு அவசியம் சுத்தம்:

கீரையை சுத்தம் செய்ய அலுப்பின் காரணமாகவே பெரும்பாலானோர் சமைப்பதில்லை. கீரைகளை வாங்கிய அல்லது பறித்து வந்த பின், 20 நிமிடங்கள் வரை நீரில் ஊறவிட்டு அலச வேண்டும். வேப்பிலை மற்றும் மஞ்சள் சேர்த்தல் நல்லது. இதனால் கீரைகளில் உள்ள மண், மருந்துகள், நஞ்சுகள் பூச்சிகள், கிருமிகள், மற்றும் மாசு போன்றவைகளை நீக்கலாம். எந்த காய், கீரையாக இருந்தாலும் சமைப்பதற்கு முன், நீரில் நன்றாகக் கழுவுவது அவசியம். சரியாக சமைக்காவிடில் மருந்தும் நஞ்சு தான்.