ஜனவரி 16, சென்னை (Kitchen Tips): ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும், பண்டிகை காலத்திலும், அதன் தொடக்கத்தில் சைவ உணவுகளுக்கு அளிக்கப்படும் மதிப்புகளைப்போல, அசைவ விரும்பிகள் தங்களுக்கு பிடித்த அசைவ வகை உணவுகளை ருசித்து சாப்பிடுவது இயல்பானது. அந்த வகையில், பொங்கல் பண்டிகையின் நிறைவில் பலரும் ஆடு, மீன், சிக்கன் என தங்களுக்கு பிடித்த அசைவ வகை உணவுகளை வாங்கி சமைத்து சாப்பிடுவார்கள். அந்த வகையில் மதுரை ஸ்டைல் ஆடு ரத்த பொரியல் (Aattu Ratham Poriyal recipe) எப்படி செய்வது என்பதனை இப்பதிவில் காண்போம். சளி இருமளால் அவதி படுவோர் ரத்த பொரியல் வைத்து சாப்பிடலாம். மேலும் கர்ப்பிணி தாய்மார்கள் ரத்த சோகை உள்ளவர்கள் இந்த ரத்த பொரியலை வைத்து சாப்பிடலாம். Mutton Biryani Recipe: வீட்டில் சுவையான மட்டன் பிரியாணி செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
ஆட்டு ரத்தம் - 1 கப்
சிறிய வெங்காயம் - 10
கடுகு உளுந்து - 1 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
மிளகாய் வத்தல் - 3
கருவேப்பிலை - 1 கை அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஆட்டு ரத்தத்தை கட்டிகள் இல்லாமல் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் சிறிய வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து சேர்க்க வேண்டும். கடுகு வெடித்ததும் சிறிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் கரைத்து வைத்த ரத்தத்தை ஊற்றி அடியில் ஒட்ட விடாமல், நன்கு வதக்க வேண்டும். பின் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கினால், சுவையான ரத்த பொரியல் ரெடி!