Batham Soup (Photo Credit: Pixabay)

மே 14, சென்னை (Kitchen Tips): பொதுவாக மாலை வேளையில் சூப் சாப்பிட்டால், அந்நேரத்தில் சாப்பிடகூடிய உடலுக்கு தீங்கு தரும் நொறுக்குத் தீனிகளை தவிர்க்கலாம். அந்த வகையில், பாதாமை (Almond) கொண்டு சூப் செய்து சாப்பிட்டால், அது நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். மேலும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. இதனை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில், பாதாம் சூப்பை (Batham Soup) எப்படி செய்வது என்பது பற்றி இதில் பார்ப்போம். Vivo X100s Series: விவோ எக்ஸ்100s சீரிஸ் சீனாவில் அறிமுகம்..! விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..!

தேவையான பொருட்கள்:

பாதாம் - கால் கப்

பால் - 1 கப்

வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி

சோள மாவு - 4 மேசைக்கரண்டி

மிளகு தூள் - அரை கரண்டி

தண்ணீர் - 4 கப்

மஞ்சள் தூள், குங்குமப்பூ - 1 சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில், பாதி பாதாமை எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். பின்னர், மீதமுள்ள பாதாமை பால் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்து, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து உருகியதும், நறுக்கி வைத்துள்ள பாதாமை சேர்த்து நன்கு பொன்னறிமாக மாறும் வரை வறுக்கவும்.

பின்பு, அதில் சோள மாவு சேர்த்து லேசாக கிளறவிட்டு, அதில் தண்ணீரை மெதுவாக ஊற்றி தொடர்ந்து கிளறிவிட வேண்டும். கொதிக்க வைக்க கூடாது.

பிறகு, அதில் பால் ஊற்றி அரைத்து வைத்துள்ள பாதாமை சேர்த்து உப்பு, மிளகு தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறிவிட்டு, மிதமான சூட்டில் வைத்து, 10 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி வைத்து, அதன்மேல் குங்குமப்பூவை பரவலாக தூவிவிடவும். அவ்வளவுதான் சுவையான பாதாம் சூப் ரெடி