மே 14, சென்னை (Technology News): சீன நிறுவனமான விவோ தற்போது ‘X100S’ சீரிஸை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில், சக்திவாய்ந்த ஸ்மார்ட் போன்களான Vivo X100s மற்றும் Vivo X100s Pro ஆகியவை நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 32MP செல்பி கேமரா, 100W சார்ஜிங் மற்றும் MediaTek Dimensity 9300+ சிப்செட் போன்ற சிறப்பம்சங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து இதில் பார்ப்போம்.

விவோ எக்ஸ்100எஸ் (Vivo X100s) மற்றும் விவோ எக்ஸ்100எஸ் ப்ரோ (Vivo X100s Pro) சிறப்பம்சங்கள்:

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் பிக்சல் அடர்த்தி கொண்ட 6.78-இன்ச் FullHD+ பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேவுடன், 120Hz புதுப்பிப்பு விகிதத்தில் வேலை செய்யும் AMOLED பேனல் கொடுக்கப்பட்டுள்ளது. X100S ஒரு பிளாட் பேனலுடனும், ​​ப்ரோ மாடல் Curved டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளது. மேலும், இதில் MediaTek Dimensity 9300+ octacore சிப்செட் மற்றும் 3.4GHz கடிகார வேகத்தில் இயங்கும் திறன் கொண்ட வசதியுடன் உள்ளது. இதில், 32MP செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள 3 சிறப்பம்சங்களும் இந்த இரண்டு மாடல்களிலும் இருக்கும். Old Man Dies After Bitten By Crocodile: முதலையின் கொடூர கடியால் ஆற்றில் குளித்து கொண்டிருந்த முதியவர் பலி..!

விவோ எக்ஸ்100எஸ் ஸ்மார்ட் போனில் 50MP பிரதான சென்சார் மற்றும் 50MP அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 3X 64MP பெரிஸ்கோப் லென்ஸ் உள்ளது. விவோ எக்ஸ்100எஸ் ப்ரோ ஸ்மார்ட் போனின், பின் பேனலில் OIS அம்சம், 50MP அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 4.3X 50MP பெரிஸ்கோப் சென்சார் பொருத்தப்பட்ட, 50MP மெயின் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.

Vivo X100S ஸ்மார்ட்போனில் 5,100mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வசதியுடன் உள்ளது. Vivo X100S Pro, 5,400mAh பேட்டரி திறன் கொண்ட, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது.

Vivo X100S விலை:

12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ்: 3,999 யுவான் (தோராயமாக ரூ. 47,000)

16GB ரேம் + 256GB ஸ்டோரேஜ்: 4,399 யுவான் (தோராயமாக ரூ. 51,800)

16GB ரேம் + 512GB ஸ்டோரேஜ்: 4,699 யுவான் (தோராயமாக ரூ. 55,000)

16GB ரேம் + 1TB ஸ்டோரேஜ்: 5,199 யுவான் (தோராயமாக ரூ. 61,000)

இது சீனாவில் டைட்டானியம் உள்ளிட்ட வெள்ளை, கருப்பு/சாம்பல் மற்றும் பச்சை நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

Vivo X100S Pro விலை:

12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ்: 4,999 யுவான் (தோராயமாக ரூ. 58,900)

16GB ரேம் + 512GBஸ்டோரேஜ்: 5,599 யுவான் (தோராயமாக ரூ. 65,900)

16GB ரேம் + 1TB ஸ்டோரேஜ்: 6,199 யுவான் (தோராயமாக ரூ. 72,900)

இவை சீனாவில் டைட்டானியம் மற்றும் வெள்ளை மற்றும் கருப்பு/சாம்பல் வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகிறது.