மே 21, சென்னை (Kitchen Tips): கேரட் சட்னி (Carrot Chutney) சுவையாகவும் சற்று காரமாகவும் இட்லி, தோசைக்கு ஏற்றார் போல மிக அருமையான சுவையில் இருக்கும். இதனை எப்படி செய்து சாப்பிடுவது என்பதனை இதில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பெரிய கேரட் - 1
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
காய்ந்த மிளகாய் - 2
இஞ்சி - ஒரு சிறிய துண்டு. Liquor Seized In Car: காரில் கடத்தப்பட்ட 800 லிட்டர் சாராயம் பறிமுதல்; தப்பியோடிய ஓட்டுநருக்கு காவல்துறையினர் வலை..!
தாளிக்க:
உளுத்தம்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
கடுகு, கருவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
செய்முறை:
முதலில் கேரட்டை பொடியாக துருவிக் கொள்ள வேண்டும். பின், வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுத்து, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, இஞ்சி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். வெங்காயம், தக்காளி வதங்கிய பிறகு துருவி வைத்துள்ள கேரட் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின்னர், இதனை ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும்.
ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து இதில் சேர்க்கவும். அவ்வளவுதான் சுவையான கேரட் சட்னி தயார்