ஜூன் 12, சென்னை (Kitchen Tips): கோடைக் காலத்தில் நாம் நீர்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் பீர்க்கங்காய் (Ridge Gourd) கண் பார்வையை தெளிவாக்கி, கோடைக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்கும். இந்த பீர்க்கங்காய் பால்கறி (Peerkangai Paal Curry) செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
தேங்காய்ப் பால் செய்ய:
தேங்காய் துருவல் - 1 கப்
இஞ்சி - 1 இன்ச்
சீரகம் - ஒரு கரண்டி. Teenager Stabbed To Death: அண்ணனை தேடி வந்த மர்ம கும்பல்; தம்பிக்கு நேர்ந்த சோகம்..!
பீர்க்கங்காய் பால்கறி செய்ய:
பீர்க்கங்காய் - 3
எண்ணெய் - 2 கரண்டி
கடுகு, சீரகம், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் - கால் கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மல்லித்தழை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 10 பல் (தட்டியது)
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பீர்க்கங்காய்களின் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். தேங்காய் துருவல், இஞ்சி, சீரகம் சேர்த்து மிக்ஸியில் அடித்து, பால் பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின், கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம் தாளித்து, பொரிந்தவுடன், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் சேர்க்கவும்.
அடுத்து வெங்காயம், பூண்டு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். பின்னர், பீர்க்கங்காயை சேர்த்து தண்ணீர் லேசாக தெளித்து அனைத்தும் வதங்கியவுடன், ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள தேங்காய்ப்பாலை ஊற்றி ஒரு கொதி வந்தவுடன், மல்லித்தழை தூவி இறக்க வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான பீர்க்கங்காய் பால்கறி தயார். இது காரம் குறைந்தது இருப்பதால், இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.