ஆகஸ்ட் 16, சென்னை (Kitchen Tips): விட்டாச்சு லீவு, இனி புதிது புதிதான ஸ்நாக்ஸ் வகைகளை கண்டுபிடித்து செய்த வண்ணமே இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு வயிறும் நிறைய வேண்டும். பிடித்ததாகவும் இருக்க வேண்டும். சத்துள்ளதாகவும் இருக்க வேண்டும். என்ன செய்யலாம் என்று தேடுபவர்கள் இந்த சுவையான தேன் லாலிப்பாப் (Honey Lollipops) செய்து தந்து அசத்தலாம்.
தேவையான பொருட்கள்:
சர்க்கரை - 1 கப்
செய்முறை:
ஒரு கப் அளவு சர்க்கரை எடுத்துக் கொள்ளவும் அதில் ஒரு பங்கு அளவில் தண்ணீர் சேர்க்கவும். சர்க்கரை பாதியாக கறையும் வரை கலக்கிக் கொள்ளவும். பின் அதே கப்பில் 2 பங்கு அளவிற்கு தேன் கலந்து கொண்டு மிதமான சூட்டில் 15 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின் தேன் சர்க்கரைப் பாகிலிருந்து ஒரு துளியைக் குளிர்ந்த நீரில் விட்டுப் பார்க்கும் போது கண்ணாடி போல இறுகினால் இறக்கத் தயாராகிவிட்டது என்று அர்த்தம்.
இறக்கிய பின் சூடு ஆறுவதற்கு முன்பே, பட்டர் பேப்பரில் சிறிது சிறிதாக வட்ட வடிவத்தில் ஊற்றி டூத்பிக் குச்சியை அதில் லாலிப்பாப்பில் இருப்பது போன்று வைக்க வேண்டும். அல்லது ஃபீரீசரில் ஐஸ்கட்டிகள் வைக்கும் ரப்பர் தட்டில் ஊற்றி குச்சிகளை சொருகி வைக்கவும். சிறிது நேரம் கழித்து மிட்டாய் ஆறி இறுகிவிடும். இப்போது குழந்தைகளுக்கு ஹனி லாலிப்பாப்பை எடுத்து சுவைக்கக் கொடுங்கள்.