Karuveppilai Thokku (Photo Credit: YouTube)

ஆகஸ்ட் 02, சென்னை (Kitchen Tips): பொதுவாக இட்லி மற்றும் தோசைகளுக்கு நாம் தேங்காய் சட்னி தக்காளி சட்னி, மல்லி சட்னி என்று அரைத்ததையே அரைத்து சாப்பிட்டுக் கொண்டுள்ளோம்‌. இதனால் நம் நாக்கே சலித்திருக்கும். அப்படியென்றால் கறிவேப்பிலை தொக்கு (Karuveppilai Thokku) இதற்கு நல்ல தீர்வாக இருக்கும். இப்படி தொக்கு வைத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை- 2 கைப்பிடி

சீரகம்- 1 ஸ்பூன்

மிளகு- 1/2 ஸ்பூன்

வர மிளகாய்- 3

சிறிதுபுளி

துருவிய தேங்காய்- 1/2 கப்

சின்ன வெங்காயம்- 10

பூண்டு- 8

நல்லெண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன் Vazhai Ilai Kozhukattai Recipe: ஆரோக்கியமான வாழை இலை கொழுக்கட்டை செய்வது எப்படி..?

செய்முறை:

முதலில் கறிவேப்பிலையை கழுவி எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம், மிளகு, வரமிளகாய், புளி, கறிவேப்பிலை, தேங்காய், உப்பு சேர்த்து வதக்கி ஆறிய பின் விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் மற்றொரு வாணலியில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நல்லெண்ணெய் ஊற்றி வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கிய பின் அரைத்த விழுதை அதில் சேர்த்து சற்று நிறம் மாறும் வரை வதக்கி எடுத்து சாதத்தோடு கலந்து சாப்பிடலாம்