டிசம்பர் 10, சென்னை (Kitchen Tips): ஊறுகாய் என்றாலே பலருக்கும் பிடித்தமான ஒன்றாகும். எந்த உணவாக இருந்தாலும் அதற்கு சைடு டிஷ் ஆக ஊறுகாய் கிடைத்தால் ருசியாக இருக்கும். ஊறுகாயில் மாங்காய், கருவாடு, மீன், இறால், எலுமிச்சை, பூண்டு, தக்காளி, பாகற்காய் என பலவகை இருந்தாலும், அந்த வகையில் சுவையான முருங்கைக்காய் ஊறுகாய் (Drumstick Pickle) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். இந்த ஊறுகாயை ஒருமுறை செய்து, சுமார் 2 முதல் 3 மாதங்கள் வரை வைத்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
முருங்கைக்காய் - 2
கடுகு - 2 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
புளி - எழுமிச்சை பழ அளவு
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
தாளிக்க தேவையானவை:
காய்ந்த மிளகாய் - 3
பூண்டு - 10
கடுகு - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி
கருவேப்பிலை - சிறிதளவு
கடுகு வெந்தய பொடி - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு Human Rights Day 2024: "இன்றைக்கு சுதந்திரம் இருக்கிறது.. உரிமைகள் தான் இல்லை.." உலக மனித உரிமை தினம்..!
செய்முறை:
முதலில் முருங்கைக்காயை வெட்டி எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து கடுகு, வெந்தயத்தை வறுத்து எடுத்து பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின், எழுமிச்சைப்பழ அளவு புளியை தண்ணீரில் கரைத்து கெட்டியான பேஸ்டை எடுத்து வைத்துக்கொள்ளவும். பாத்திரத்தில் புளி பேஸ்ட்டை சேர்த்து 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக கெட்டியான பதத்திற்கு வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து, நல்லெண்ணெய் 1 குழிக்கரண்டி சேர்த்துக்கொண்டு முருங்கைக்காயை அதில் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துவிட்டு, அதே எண்ணெய்யில் காய்ந்த மிளகாய், கடுகு, தட்டிய பூண்டு 10, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து பொரித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது, ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூள் 3 தேக்கரண்டி, வறுத்து அரைத்த கடுகு வெந்தயப்பொடி 1 தேக்கரண்டி, தேவையான அளவு உப்பு, பொரிச்ச முருங்கைக்காயை சேர்த்து கலந்துவிட்டு புளி பேஸ்ட்டை சேர்த்து கடைசியாக வறுத்து வைத்திருக்கும் கருவேப்பிலை வரமிளகாய் கலவையை சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.
அவ்வளவுதான் சுவையான முருங்கைக்காய் ஊறுகாய் ரெடி. இதை 3 மாதம் வரை சேமித்து பயன்படுத்தலாம் நல்ல சுவையாக இருக்கும்.