Prawn Curry Recipe (Photo Credit: @TheBigPrawnCo X)

டிசம்பர் 15, சென்னை (Chennai): இறால் குழம்பை சோறு மட்டுமின்றி தோசை, சப்பாதி ஆகிய டிபன் வகைகளுக்கும் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். அதனை சுலபமாக செய்வது என்பதைப் பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

இறால் - கால் கிலோ

உருளைக்கிழங்கு - 1

கத்தரிக்காய் - 2

எண்ணெய் - தேவைக்கேற்ப

உப்பு - தேவைக்கேற்ப

கொத்தமல்லித் தழை - 1 கைப்பிடி

குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

தேங்காய் துருவல் - கால் கப்

தக்காளி - 1

இஞ்சி - சிறு துண்டு

பூண்டு - 5 பல்

பட்டை - 2

சோம்பு - அரை டீஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

சோம்பு - அரை டீஸ்பூன்

வெந்தயம் - கால் டீஸ்பூன் LIC Movie Update: விக்னேஷ் சிவனின் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் எல்ஐசி திரைப்படம்: பூஜையுடன் படப்பிடிப்புகள் தொடக்கம்.. விபரம் இதோ.!

செய்முறை :

இறாலை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஊற வைக்கவும். கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். மறுபக்கம் தேங்காய் துருவல், தக்காளி, சோம்பு, பட்டை ஆகியவற்றை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். பின் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், சோம்பு, வெந்தயம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.

பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, அரைத்த விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கத்தரிக்காய், உருளைக் கிழங்கு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

பின் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி இறாலை சேர்த்து வதக்கவும். இறாலை வதக்கி சேர்ப்பதால், குழம்பு சுவையாக இருக்கும். வதக்கிய இறாலை குழம்பில் சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்தவுடன் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். சுவையான இறால் குழம்பு தயார்.