பிப்ரவரி 07, சென்னை (Kitchen Tips): எப்போதும் போல ஒரே மாதிரியான பாயசம் செய்து சாப்பிடுவதைவிட, வித்தியாசமான முறையில் அதுவும் சேமியா பயன்படுத்தி எப்படி சுவையாக பாயசம் செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். சேமியா பாயசம் (Semiya Payasam) மிகவும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
சேமியா - 125 கிராம்
பால் - 750 மில்லி
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - சிறிதளவு
உலர்ந்த திராட்சை (கிஸ்மிஸ்) - சிறிதளவு
சர்க்கரை - 125 கிராம்
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு Vazhaipoo Thuvaiyal Recipe: வாழைப்பூ துவையல் செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் அரை டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி, சேமியா சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். இதில் பால் சேர்த்து, தீயை மிதமாக்கி பாலிலேயே சேமியாவை வேக விடவும். சேமியாவைத் தொட்டால், மசியும் வரை வேக விடவும். இதில் சர்க்கரையைச் சேர்க்கவும். சர்க்கரை கரைந்து பதம் கெட்டியாகும் வரை அடுப்பில் வைக்கவும். மீதம் இருக்கும் நெய்யில் உலர்ந்த திராட்சை (கிஸ்மிஸ்) மற்றும் முந்திரியை வறுத்து எடுக்கவும். இதை பாயசத்தில் சேர்த்து, ஏலக்காய்த்தூளைச் சேர்த்துக் கலக்கி இறக்கிப் பரிமாறவும். சுவையான சேமியா பாயசம் தயார்.