Elakkai Sorbet (Photo Credit: YouTube)

மே 20, சென்னை (Kitchen Tips): ஏலக்காய் சர்பத் (Cardamom Sorbet) தாகத்தை தணித்து, உடல் சூட்டை குறைக்க உதவுகிறது. இந்த கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள ஒரு சிறந்த பானமாக இது உள்ளது. இவற்றை எப்படி செய்வது என்பதனை இதில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

ஏலக்காய் - 5

எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி

எலுமிச்சை பழம் - அரை பழம்

சர்க்கரை - 2 தேக்கரண்டி

ஐஸ் க்யூப் - 10

தண்ணீர், உப்பு - தேவையான அளவு. Married Woman Death: பற்பசை என நினைத்து எலி பசையில் பல் துலக்கிய பெண் பலி..! தூக்க கலகத்தில் இருந்ததால் நேர்ந்த சோகம்..!

செய்முறை:

முதலில் ஏலக்காயை (Elaichi) எடுத்து தோல் நீக்கிக்கொள்ளவும். பின் அதனை பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து, ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர், அதில் எலுமிச்சை சாறை சேர்க்க வேண்டும்.

பின்பு, பிடியாக அரைத்து வைத்த ஏலக்காய் தூளை கலந்து நன்கு கலக்கவும். இறுதியாக, ஐஸ் க்யூப் சேர்த்து சில நிமிடங்கள் வரை வைத்திருக்க வேண்டும்.

இதனை ஒரு டம்ளரில் ஊற்றி மீண்டும் ஐஸ் க்யூப் மற்றும் எலுமிச்சை துண்டுகளை சேர்த்து பருகலாம். கோடை வெயிலுக்கு ஏற்ற ஏலக்காய் சர்பத் தயார்.