ஜூன் 10, சென்னை (Kitchen Tips): முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தை அப்படியே உண்பதன் மூலம் உடல் உஷ்ணம் அதிகரிப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். அதனால், இதனை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இனிப்பு பண்டமாக செய்து சாப்பிடலாம். மாம்பழ சுவையும் குறையாமல் இருக்கும். அந்தவகையில் மாம்பழத்தை வைத்து மாம்பழம் பர்பி (Mango Burfi) எப்படி செய்வது என்பதனை இதில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
மாம்பழம் - 1 கப்
காய்ச்சிய பால் - அரை கப்
சர்க்கரை - 1 கப்
துருவிய தேங்காய் - 2 கப்
நெய் - 3 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் - சிறிதளவு. 4 People Drowned In River: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஆற்றில் மூழ்கி பலி..!
செய்முறை:
முதலில், நன்கு பழுத்த மாம்பழம் ஒரு கப் மற்றும் பால் என இவை இரண்டையும் மிக்ஸியில் நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர், அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அரைத்தவற்றை இதில் ஊற்றி அதனுடன், சர்க்கரை சேர்த்து நன்றாக கரையும் வரை கிளறி விடவும்.
அடுத்து, தேங்காய் துருவலை மிக்ஸியில் பொடியாக அரைத்து, அதனுடன் சேர்த்து நன்றாக ஒன்றோடொன்று கலக்கும் படி மிதமான சூட்டில் கலக்கி விட வேண்டும். பின், இதனுடன் 3 மேசைக்கரண்டி அளவு நெய் ஊற்றி நன்றாக கலக்கவும்.
பிறகு, அந்த கலவையில் ஏலக்காய் பொடி தூவி ஒரு தட்டில் ஊற்றி நன்றாக தேய்த்துவிட்டு, கத்தியில் ஒரே அளவாக கட்செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான மாம்பழ பர்பி ரெடி.