
மார்ச் 06, சென்னை (Kitchen Tips): தந்தூரி சிக்கன் உணவகங்களில் மட்டுமே செய்ய முடியும் என பலரும் நினைத்திருப்போம். ஆனால் தந்தூரி சிக்கனை மிக எளிமையாக எப்படி வீட்டிலேயே செய்வது என்பதை தெரிந்துக் கொள்வோம் வாங்க. Mealmaker Varuval Recipe: அட்டகாசமான சுவையில் மீல்மேக்கர் வறுவல் செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
கோழி கறி – 4 (தொடை பகுதி)
எண்ணெய் – தேவையான அளவு
கேசரி பவுடர் – அரை சிட்டிகை
மைதா மாவு – 50 கிராம் அளவு
கடலை மாவு – 50 கிராம் அளவு
தந்தூரி சிக்கன் மசாலா – 50 கிராம்
எலுமிச்சை பழம் – 1
இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
முட்டை – 1 (வெள்ளை கரு மட்டும் போதும்)
மிளகுதூள் – 1 மேஜைக்கரண்டி
கரம் மசாலா – 1 மேஜைக்கரண்டி
செய்முறை:
இப்பொழுது சிக்கனை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் வத்தல் தூள் மல்லித்தூள் மஞ்சள் தூள் உப்பு நல்ல மிளகுத்தூள் சீரகத்தூள் கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து அதோடு தயிரும் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். தந்தூரி செய்யும் கம்பியை சூடாக்கி அதில் சிக்கனை வைக்கவேண்டும் ஒரு முறை வந்த பிறகு மறு முறை திருப்பிப் போட வேண்டும். சுவையான தந்தூரி சிக்கன் ரெடி.