ஜனவரி 22, சென்னை (Kitchen Tips): சைவ பிரியர்களுக்கான புரதச்சத்து நிறைந்த மீல் மேக்கர் ரெசிபி இருக்கும். இந்த மீல் மேக்கர் வைத்து வறுவல் செய்து சாப்பிட்டால் அனைவருக்கும் பிடிக்கும். அப்படிப்பட்ட மீல் மேக்கர் வறுவல் (Mealmaker Varuval) எப்படி செய்வது என்பதை இப்பதிவில் காண்போம். Beetroot Poriyal Recipe: பீட்ரூட் பொரியல் சுவையாக செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
மீல்மேக்கர் - 100 கிராம்
மிளகு - 2 தேக்கரண்டி.
சோம்பு - 2 தேக்கரண்டி.
வரமிளகாய் - 4
எண்ணெய் - 2 தேக்கரண்டி.
சீரகம் - கால் தேக்கரண்டி.
கிராம்பு - 3
வெங்காயம் - 2
தக்காளி - 1
கருவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து நன்றாக கொதிக்கவிடவும். அதில்m 100 கிராம் மீல்மேக்கரை போட்டு 1 நிமிடம் கிளறிவிட்டு வடிக்கட்டி எடுத்துக்கொள்ளவும். இப்போது, அதை நன்றாக பிழிந்துவிட்டு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி மிளகு, 2 தேக்கரண்டி சோம்பு, 4 வரமிளகாய் சேர்த்து வறுத்து எடுத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
- கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு, சீரகம், கிராம்பு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கருவேப்பிலை சிறிதளவு, பொடியாக நறுக்கிய தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதங்கியதும் எடுத்து வைத்திருக்கும் மீல் மேக்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- இதில், வறுத்து பொடி செய்து வைத்த மசாலா அத்துடன் மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி, உப்பு சிறிதளவு சேர்த்து நன்றாக கலந்துவிடவும். இதில், தண்ணீர் சிறிது விட்டு கிளறிவிட்டு 5 நிமிடம் மூடிப்போட்டு வேகவிடவும்.
- இறுதியாக, கரம் மசாலா 1 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து கலந்துவிட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுவையான மீல்மேக்கர் வறுவல் தயார்.