மே 20, சென்னை (Kitchen Tips): குழந்தைகள் மாலை நேரங்களில் சாப்பிடுவதற்கு ஏற்ற ஸ்நாக்ஸ் ஆக வீட்டில் உள்ள வாழைக்காயை வைத்து சிப்ஸ் செய்து சாப்பிடலாம். இது மிகவும் எளிய முறையில் மற்றும் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவை ஆகும். இந்த வாழைக்காய் சிப்ஸை (Vazhaikkai Chips) எப்படி செய்வது என்று இதில் பார்ப்போம்
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் - 1
உப்பு - தேவையான அளவு
மிளகுத் தூள்/மிளகாய் தூள் - தேவையான அளவு
எண்ணெய் (பொரிப்பதற்கு) - தேவையான அளவு. Car Accident: 20 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 2 பேர் படுகாயம்..! ஒருவர் பலி..!
செய்முறை:
முதலில் வாழைக்காயை தண்ணீரில் கழுவி, இரு முனைகளையும் வெட்டி தோலுரித்துக் கொள்ளவும். பின்னர், அதனை மெல்லியதாக வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
பின், ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
எண்ணெய் நன்கு சூடான பிறகு, அதில் வாழைக்காய் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொண்டு, ஒரு பவுலில் போட்டு, அதில் மிளகுத் தூள்/மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிவிட வேண்டும். அவ்வளவுதான், மழை நேரத்தில் சுவையாக சாப்பிட வாழைக்காய் சிப்ஸ் ரெடி.