ஜூலை 24, சென்னை (Cooking Tips): இந்திய சமையலில் கேரட் தனக்கென தனி இடத்தை கொண்டது ஆகும். வெறும் வாயில் சாப்பிடவும், கூட்டு, பொரியல், சாதம், குழம்பு என பல வகைகளில் அதனை பயன்படுத்தலாம். சுவை மிகுந்த கேரட்டில் இருக்கும் வைட்டமின் ஏ கண்களுக்கு நன்மையை வழங்கும். ஆண்டி-ஆக்சிடன்ட் புற்றுநோயை தடுக்கும், நார்சத்து செரிமானம் மற்றும் வயிறு ஆரோக்கியத்திற்கு உதவி செய்யும். அதுமட்டுமல்லாது, இதய ஆரோக்கியம் மேம்பாடு, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பு, உடல் எடை குறைப்பு, சரும பராமரிப்பு போன்ற விஷயங்களுக்கும் கேரட் உதவுகிறது. இவ்வாறாக பல நன்மைகள் கொண்ட கேரட்டில் நாம் கூட்டு, பொரியல், குழம்பு என விதவிதமாக வைத்து சாப்பிட்டு இருப்போம். ஆனால், குழந்தைகளுக்கும் பிடிக்கும் வகையில் கேரட் 65 (Carrot 65 Receipe) செய்வது குறித்து உங்களுக்கு தெரியுமா?. இன்று கேரட் 65 செய்வது எப்படி என தெரிந்துகொள்ளுங்கள். Washing Machine Maintenance Tips: வாஷிங் மெஷினின் ஆயுளை நீட்டிக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்..!
செய்யத்தேவையான பொருட்கள்:
கேரட் - 300 கிராம்,
65 மசாலா - 3 கரண்டி,
இஞ்சி பூண்டு விழுது - 1/4 கரண்டி,
கான் பிளவர் மாவு - 4 கரண்டி,
கடலை மாவு - 2 கரண்டி (விருப்பத்திற்கேற்ப)
உப்பு - உங்களின் தேவைக்கேற்ப,
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் எடுத்துக்கொண்ட கேரட்டை வட்ட வாக்கில் சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
- பின் அதில் எடுத்துக்கொண்ட இஞ்சி பூண்டு விழுது, 65 மசாலா, கான் பிளவர் மாவு, கடலை மாவு, உப்பு ஆகியவற்றை சேர்ந்து நன்கு பிசைந்து கிளறிவிட வேண்டும்.
- தேவை என்ற பட்சத்தில் சிறிதளவு நீர் மட்டும் சேர்த்துக்கொள்ளலாம். இறைச்சியை போல அல்லாமல், இவை அனைத்தையும் கிளறி 5 முதல் 10 நிமிடங்கள் கழித்து எண்ணெயில் சேர்த்து கேரட்டை பொறித்து எடுக்க தொடங்கலாம்.
- சுவையான கேரட் 65 தயார்.
வீடியோ நன்றி: Balaji's Kitchen