Buffalo (Photo Credit: Pixabay)

மார்ச் 05, சென்னை (Chennai News): தமிழகத்தில் எருமை வளர்ப்போர் சற்று குறைவாகவே இருக்கிறார்கள். ஆனால் கால்நடைகளிலேயே அதிக உற்பத்தியைத் தருவது எருமை மாடுகள் தான். இவற்றின் பாலில் 7 சதவீதம் கொழுப்புச் சத்துக்கள் உள்ளதால் இதற்கு வணிக ரீதியாக தேவை இருந்துகொண்டே இருக்கிறது. அதனுடன் விவசாயிகளுக்கு பசு மாடுகளை விட எருமை மாடுகள் வளர்க்க செலவும் குறைவு, எளிமையானதும் கூட. அதிக லாபம் ஈட்டித்தரும் எருமை மாடுகள் வட இந்தியாவில் அதிகம் வளர்க்கப்படுகிறது. சரியான முறையில் எருமைகளை பாராமரித்து வந்தால் நல்ல லாபம் ஈட்டலாம். Water Tank: குறைந்த விலையில் சிறந்த தண்ணீர் தொட்டி.. அசத்தல் டிப்ஸ் இதோ..!

எருமை மாடுகளின் இனங்கள்

முர்ரா:

இந்த வகை இனங்கள் பஞ்சாப் டெல்லி பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. மேலும் ரோடக், ஹீசார், போண்ற ஹரியானாவின் மேற்கு பகுதிகளிலும் காணப்படுகின்றன.

இந்த இன் மாடுகளின் பாலில் 7 சதவீதம் கொழுப்புச் சத்துக்கள் உள்ளது. இவைகள் உடல்கள் நன்கு பெரிதாகவும் கொம்புகள் பின் நோக்கி வளைந்தும், கழுத்து நீண்டும், மடி பெரிதாகவும் காணப்படும்.

இது தனது 40-50 மாதங்கலில் முதல் கன்று ஈனும். முறையான பாரமரிப்பு இருந்தால் 36-40 மாதத்திலேயே கன்றை ஈனும். 450-500 நாட்கள் இடவேளியில் கன்றுகளை அடுத்தடுத்து ஈனும் திறனுடையது.

இந்த இனங்கள் சிறிது குளிரான பகுதிகளில், கடலோரப் பகுதிகளில் நன்கு வளரும். எனினும் இதன் உற்பத்தியால் நாடு முழுவதும் வளர்க்கப்படுகிறது.

சுர்தி:

இது குஜராத்தை சேர்ந்தவை. கைரா, பரோடா மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறது.

இந்த மாடுகளின் அவைகளின் வளர்ச்சிக்கு ஏற்ப எடைக் கொண்டது. பெரிய முகத்தையும், கண்களையும் கொண்டது. மேலும் இதன் கொம்புகள் அரிவார் போல், பின்னோக்கி நேராக வளைந்தும் தட்டையாகவும் காணப்படும்.

இவ்வினங்கள் கறுப்பு அல்லது காவி நிறம் கலந்து இருக்கும். இதன் கால் தொடையில் இரண்டு வெள்ளை நிறப்பகுதி காணப்படுவது இதன் சிறப்பம்சம் ஆகும்.

இதன் சராசரி பால் அளவு 1700 கி.கி.

இந்த இன மாடுகள் அதன் முதல் கன்றை 40-50 மாதங்களில் ஈனும். அடுத்தடுத்து கன்றுகளை 400-500 நாட்கள் இடைவெளியில் ஈனும். இந்த இன காளைகள் எளிமையான வேலைகளுக்கு ஏற்றதாகும்.

ஜாப்ரா பாதி:

இது குஜராத் கத்தைவார் பகுதியை பூர்வீகமாக கொண்டது.

இந்த இனத்தின் மாடுகளின் உடலில் அதிக ரோமங்கள் காணப்படும். நீளமான ஊசி போன்ர முக அமைப்புடையது. கொம்புகள் வெள்ளை அலல்து சாம்பல் நிறத்தில் காணப்படும்.

இதன் சராசரி பால் அளவு 1800-2700 கிகி ஆகும். மேலும் இதில் கொழுப்புச் சத்துகள் அதிகளவு உள்ளது.

இந்தியாவில் முரா, மஹ்சானா போன்றவை அதிக பால் உற்பத்தியால் பண்ணைக்கு ஏற்ற இனங்களாக உள்ளது. மேலும் பசு மாடுகளை விட எருமைப்பலில் தான் அதிக அளவிலான மதிப்புகூட்டல் பொருட்களை செய்ய முடியும்.

எருமைகளை குட்டிகளாக வாங்கும் போது, அதன் இனத்தையும் பெற்றோரின் பண்புகளையும் தெரிந்து வாங்க வேண்டும். மேலும் எருமைகள் ஆரோக்கியமாக உள்ளாத என பார்த்து வாங்க வேண்டும்.

எருமைகள் எல்லா வருடங்களும் கன்று ஈனக்கூடியவை. சரியான பராமரிப்பு இல்லையெனில் குட்டி ஈனுவதில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. அப்பொழுது மட்டும் செலவுகள் அதிகமாக இருக்கும்.

இருப்பிடம்:

எருமை மாடுகளுக்கும், மற்ற கால்நடைகளுக்குப் போன்றே கொட்டகை அமைக்க வேண்டும். நல்ல காற்றோட்ட மற்றும் இட வசதியுடன் மேடான பகுதியில் கொட்டகை அமைக்க வேண்டும். மழைநீர் மற்றும் தண்ணீர் தேங்காதவாறான வடிகால் வசதியும் அவசியம். மேலும் சூரிய ஒளி அதிகம் மாடுகளை தாக்கதவாறும் இருக்க வேண்டும். கால்நடைகள் இருக்கும் பகுதி சுகாதாரமாக இருக்க வேண்டும்.

தீவனம்:

எருமைகளுக்கு தீவனம், அதிக புரதம் மற்றூம் தாது உப்புகள் கொண்டதாக இருக்க வேண்டும். துர்நாற்றம் இல்லாத உணவுகளை கொடுக்க வேண்டும். எளிமையாக சீரணிக்கும் உணவுகள் மட்டுமே அளிக்க வேண்டும்.

எருமைகள் வயிறு பெரியதாக இருப்பதால் அவைகளுக்கு முழுமையான உணவு அளிக்க வேண்டும். குறைவான உணவுகளை அளித்தால் அவைகள் பூச்சிகள், மண் போன்றவற்றை உண்ண ஆரம்பித்துவிடும். பச்சை தீவனம் எருமைகளுக்கு ஏற்றது.

பயிர்களின் கழிவுகள் போன்ற நார்சத்து உள்ள தீவனம் பாலில் அதிக கொழுப்புத் தன்மையைப் பெற்றுத்தரும். நல்ல சத்துள்ள உணவுகளை மாடுகளுக்கு அளிப்பதன் மூலம் அதிக கொழுப்புசத்துள்ள பாலைப் பெறலாம்.