Sani Peyarchi (Photo Credit: Team LatestLY)

பிப்ரவரி 03, சென்னை (Chennai News): எதிர் வருகின்ற 2025 வது வருடம் மார்ச் மாதம் 29ஆம் தேதி சனிக்கிழமை அன்று இதுவரை கும்பத்தில் வீற்றிருந்த சனி பகவான் மீன ராசிக்கு இடப்பெயர்ச்சியாக உள்ளார். மேற்படி சனி பகவான் பெயர்ச்சியாக கூடிய இந்த அமைப்பு என்பது மேஷ ராசிக்கு எப்படிப்பட்ட பலன்களை தரும் என்பதை சற்று தெளிவாக விளக்கக்கூடியது இந்த பதிவு. அதாவது பொதுவாக சனிப்பெயர்ச்சி என்பது மிகவும் பிரதானமானது ஜோதிடத்தை எப்பொழுதும் கவனித்து வாழ்க்கை முடிவுகளை எடுக்கக் கூடியவர்களுக்கு, அந்த அடிப்படையில் மேஷ ராசி நேயர்களுக்கு இது எப்படிப்பட்ட பலன்கள் தரும் என்பதை பார்க்கலாம்.

மேஷம் சனி பெயர்ச்சி பலன்கள் (Mesham Sani Peyarchi Palan 2025):

மேஷ ராசிக்கு 10 என்று சொல்லப்படக்கூடிய தொழில் ஸ்தானம் 11 என்று சொல்லப்படக்கூடிய லாபஸ்தானம் இந்த இரண்டு வீடுகளுக்கு அதிபதியாக வரக்கூடிய கிரகம் சனிபகவான். இவர் இதுவரைக்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் இருந்து கோச்சாரத்தில் பலன்கள் வழங்கிக் கொண்டிருந்தார். இப்பொழுது நடக்கவுள்ள சனிப்பெயர்ச்சி லாப ஸ்தானத்தில் இருந்த சனிபகவான் 12ஆம் இடம் என்கின்ற விரய ஸ்தானத்திற்கு வர உள்ளார். பொதுவாக ஜோதிடத்தை பொறுத்த அளவிற்கு அந்த ஜாதகத்தின் ஜென்ம ராசிக்கு 12-ஆம் இடத்தில் சனி வருவது ராசியின் மீது சனி பயணப்படுவது ராசிக்கு இரண்டாம் இடத்தில் சனி பயணப்படுவது இந்த தொகுப்பிற்கு எல்லாம் ஏழரைச் சனி காலங்கள் என பெயர். ஆக மேஷ ராசிக்கு ஏழரைச் சனி தொடங்க உள்ளது. Paruppu Payasam Recipe: அட்டகாசமான சுவையில் பருப்பு பாயசம் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

மேஷ ராசிக்கு ஏழரை சனி தொடங்க உள்ளது என்று எடுத்துக் கொண்டாலும் விரைய சனி எல்லோருக்கும் ஒரு போல பலன்கள் தருவது இல்லை, வயதுக்குத் தகுந்தார் போல் மாற்றங்கள் இருக்கும். ராசிக்கு 12ஆம் இடத்தில் வரக்கூடிய சனிபகவான் மூன்றாவது பார்வையால் ராசியின் இரண்டாம் இடத்தை பார்ப்பதால், வரவும் செலவும் சரிசமமாக இருக்கக்கூடிய அமைப்பாக, சிலருக்கு வரவை விட செலவு அதிகமாக உள்ள காலங்களாக இந்த ஏழரைச் சனி காலங்கள் இருக்கும். இனி ராசியின் விரைய ஸ்தானத்தில் உள்ள சனி பகவான் தனது சம சப்தம பார்வையால், ஆறாம் இடத்தை பார்ப்பது கவனிக்கத்தக்கது. அதாவது வேலை செய்யக்கூடிய அலுவலகத்தில், மேஷ ராசி நேயர்களுக்கு சிறிது மன அழுத்தங்கள் உண்டாக, வேலையில் இடம் மாற்றம் உண்டாக பலன் தரும் என்பதையும், பொருளாதார ரீதியான வளர்ச்சியை இந்த சனிபகவான் சற்று குறைத்து விடுவார் என்பதையும் ஒரு பலனாக எடுத்துக் கொள்ளலாம்.

முக்கியமாக நீதிமன்றத்தில் வழக்குகளில் பயணப்படக் கூடியவர்கள் தீர்வு காண முடியாமல், அதற்காக தொடர்ந்து விரயங்களை சந்திக்க கூடிய அமைப்புகளும் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். இனி இதற்கு அடுத்தார் போல் தனது பத்தாவது பார்வையால் ராசியின் பாக்கியஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பார் என்பது கவனிக்கத்தக்கது. அதாவது தந்தையால் விரையங்கள் பதவி உயர்வு போன்ற விஷயங்களுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதில் தடை, அதுபோக பொருளாதார ரீதியான அழுத்தங்கள் சிலருக்கு கடன் தொல்லை இவற்றிற்கும் இந்த சனிபகவான் பலன் தருவார் என்பதை கணித்துக் கொள்ள வேண்டும். இனி இது விரைய சனி காலமாக இருப்பதால் திருமண வரன் தேடி அலையக்கூடியவர்கள் சற்று நிதானமாக முடிவு எடுக்க வேண்டும். இருப்பினும் குருபகவான் சற்று வலிமையாக உள்ளதால் ஏழரைச் சனியின் தாக்கங்கள் இருந்தால் கூட திருமண அமைப்பு உண்டு.

பொருளாதார ரீதியாக வரவும் செலவும் சரியாக இருக்க கூடிய அமைப்பு, சிலருக்கு வரவை விட செலவு அதிகமாக கடன் உருவாக்கக்கூடிய அமைப்பில் இருக்கும். தந்தை தாய் இருவருக்கும் பொருளாதார ரீதியான இழப்புகள், மருத்துவ செலவுகள் இவற்றை உருவாக்கி கொடுக்க கூடிய அமைப்பிலும், கல்வி பயிலக் கூடிய மாணவர்களுக்கு நினைத்த கல்வி கிடைப்பதில் சிலருக்கு தடை ஏற்படுவதும், சிலர் கல்விக்காக இடம் மாற்றத்தை அதாவது வெளியூரில் சென்று படிக்க கூடிய அமைப்புகளையும் இந்த சனிபகவான் உருவாக்கித் தருவார் என்பதையும் பலனாக எடுக்கலாம். 30 வயதிற்கு மேற்பட்ட மேஷ ராசி நேயர்களுக்கு இந்த விரயம் என்பது சுப விரயமாக இருக்கவும் பலன் உண்டு.

பரிகாரம்:

சனிக்கிழமை மாலை வேலைகளில் நவகிரக வழிபாடு செய்து கொள்வது, நடக்கக்கூடிய தசா புக்திகளுக்கு தகுந்தார் போல் அதற்கான வழிபாடுகளை முயற்சி செய்து கொள்வது என்பது ஏழரைச் சனியின் தாக்கத்திலிருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ள உதவும்.