Carrot Kesari (Photo Credit: YouTube)

அக்டோபர் 22, சென்னை (Kitchen Tips): தீபாவளி ஸ்பெஷலாக இனிப்பு ரெசிபியை வீட்டிலேயே சுலபமாக செய்யலாம். அந்தவகையில், சுவையான கேரட் கேசரி (Carrot Kesari) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். இது மிகவும் சுவையாகவும், கேரட் (Carrot) பயன்படுத்துவதால் உடலுக்கு தேவையான சத்துக்களும் கிடைக்கின்றன.

தேவையான பொருட்கள்:

கேரட் - 2

ரவை - 1 கப்

சர்க்கரை - ஒன்றரை கப்

முந்திரி - 10

ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி

நெய் - தேவையான அளவு. Green Chilly Curry: பச்சை மிளகாய் மட்டும்தான் சமைக்க இருக்குதா? மிளகாயில் காரசாரமான, சுவையான தொடுகறி.. அசத்தல் சமையல் டிப்ஸ் இதோ.!

செய்முறை:

  • முதலில் ஒரு கடாயில் 4 தேக்கரண்டி நெய்விட்டு, ரவை 1 கப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். இப்போது, நெய் 4 தேக்கரண்டி விட்டு, 10 முந்திரியை பொரித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • அடுத்து, 2 கேரட்டை சின்னதாக வெட்டி அதை மிக்ஸியில் போட்டு அரைத்து நைசாக எடுத்துக் கொள்ளவும். கடாயில் மீதமிருக்கும் நெய்யில் நன்றாக கேரட்டை சேர்த்து வதக்கவும்.
  • வறுத்து வைத்திருக்கும் ரவையை இதோடு சேர்த்து 2 நிமிடம் கலந்துவிட்டு 3 கப் சுடுதண்ணீரை சேர்த்து கலந்து வேக விடவும். நன்றாக ரவை வெந்ததும் ஒன்றரை கப் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிண்ட வேண்டும்.
  • கடைசியாக, வாசனைக்கு ஏலக்காய்பொடி சேர்த்துவிட்டு வறுத்து வைத்திருக்கும் முந்திரியை சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும். சுவையான கேரட் கேசரி ரெடி.