Cotton (Photo Credit: Pixabay)

மார்ச் 06, சென்னை (Chennai News): தொழிற்புரட்சி இங்கிலாந்தில் உருவான கால கட்டத்தில் அதிக அளவு ஆடை உற்பத்திக்காக ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் பருத்தியும் ஒன்றானது. அதனால் இங்கிலாந்தில் பருத்தி தொழில் வளர்ச்சி கண்டது.

தற்போது பருத்தியானது ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட உலகெங்கும் இது பயிரிடப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பணப்பயிரில் முதன்மையாக பருத்தி விளங்கிறது.

பத்திற்கும் மேற்பட்ட ரகங்களில் ராசி என்னும் பருத்தி ரகம் தமிழகத்தில் அதிக மகசூலைத் தரும் ரகமாக அனைவராலும் பயிரிடப்பட்டு வருகிறது. பருத்திப் பயிரை முதன்மை பயிராக 20 வருடங்களாக பயிர் செய்து வருகிறார் கடலூரைச் சேர்ந்த விவசாயி ரவி.

நடவு முறை:

4 ஏக்கரில் ராசி ரக பருத்தியை பயிர் செய்து வரும் இவர், இந்த பருத்தி செம்மண்ணை விட களிமண், கரிசல் மண் போன்ற தண்ணீர் தேங்கும் பகுதிகளில் நன்கு வளரக் கூடியவை. செம்மண் பகுதிகளுக்கு உரங்கள் அதிகம் தேவைப்படும்.

மண்ணை தொழுவுரம் இட்டு உழுது ஒன்றரை அடி ஆழத்துடன் நீர் பாய்ச்சுவதற்கு பாத்திகள் அமைத்து பருத்தி விதைகளை நட வேண்டும். இதற்கு முன் நெல்லை விதைத்திருந்தால் உழவு செய்யாமல், மணலை மட்டும் இட்டு, நேரடியாக பாத்தி அமைத்து நடவு செய்யலாம். பருத்தியை 3 அடி இடைவேளியில் விதைகளை அடர் நடவு செய்யலாம். Plank Exercise: தினமும் பிளாங்க் பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா..? விவரம் இதோ..!

உரமும் களையும்:

நடவு செய்த 22 நாட்களுக்கு பிறகு செடிகளுக்கு யூரியா அளிக்கலாம். பின் 15 மற்றும் 40 நாட்கள் இடைவேளியில் களை எடுத்து விட்டு, செடிகளுக்கு உரம் அளிக்க வேண்டும். தலைச்சத்துகள் அதிகம் அளிப்பதால் செடிகள் நன்கு வளர்ந்து மகசூலைத் தரும். மாதம் இருமுறை செடிகளுக்கு தண்ணீர் அளிக்கலாம். பருத்திக் தேவையான தண்ணீர் அளிக்க வேண்டும்.

யூரியா, டிஎஃப், வேப்பம்புண்ணாக்கு, பொட்டசியம், இயற்கை உரங்களை 15 நாள்கள் இடைவேளியில் செடிகளுக்கு அளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை மூலிகை பூச்சி விரட்டி அல்லது பூச்சி விரட்டி மருந்துகளைப் பயன்படுத்தலாம் என்கிறார்.

நோய்த் தாக்குதல்:

பருத்தி செடியின் இலைகளில் புள்ளிகள் தோன்றும். இலையில் ஓரங்களில் அரக்கு நிறத்திலும் நடுவில் வெளிர் நிறத்திலும் தோறும். இதனால் இலைகலும் காய்களும் காய்ந்து உதிர்ந்து விடும். மகசூலும் பாதிக்கும். வயலில் அதிகமாக நீர் தேங்கினால் வேர் அழுகள், தண்டு பகுதியில் புண்கள் ஏற்படுதல் போன்றவை வரும். மேலும் பிற பயிர்கள் போன்று வாடல், சாம்பல் போன்ற நோய்த் தொற்றும் காணப்படும். இதற்கு உரங்களை அவ்வப்போது அளித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும்.

சப்பாத்தி பூச்சி தாக்குதல் சற்று அதிகமாக இருக்கும் இதைக் கட்டுப்படுத்த, மருந்துகளை சரியான நேரத்தில் அளித்தாலே போதும் என்கிறார் விவசாயி ரவி.

அறுவடை:

நடவு செய்த 3 மாதங்களில் பூ பூத்து அடுத்த இரு மாதங்களிலேயே காய்கள் வெடிக்க ஆரம்பிக்கும். 160 நாட்களில் பருத்து அறுவடைக்கு தயாராகி விடும். செடிகள் முழுவதும் காய்ந்து பஞ்சுகள் வெடித்திருக்கும் இதை அறுவடை செய்து கொள்ளலாம். அறுவடை செய்த பிறகு செடிகளில் மீண்டும் யூரியா வைத்தால் அவைகள் மீண்டும் தழைக்க ஆரம்பிக்கும். பிறகு இவைகள் மீண்டும் 6 மாதத்தில் அறுவடைக்குத் தயாராகும். ஆனால் பருத்தி முதல் அறுவடைக்குப் பிறகு நிலத்தை உழது வேறு பயிரை நடவு செய்வது மகசூலை அதிகரிக்க உதவும் என்கிறார் ரவி.

ராசி ரக பருத்தி, ஏக்கருக்கு 10 முதல் 15 குவிண்டால் (1.5 டன்) கிடைக்கும். 1 குவிண்டால் (100 கி.கி) குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் கிடைத்தாலும் அது நல்ல லாபமாக இருக்கும். கடந்த வருடம் 1 குவிண்டால் 12 ஆயிரத்திற்கு மேல் விற்பனை ஆனது. நடப்பாண்டில் இதன் விலை குறையவும் வாய்ப்புள்ளது. ஆண்டிற்காண்டு பருத்தி விலை மாறுபடும். சரியான நுகர்வோர் கிடைக்கும் பட்சத்தில் பருத்தி லாபகரமான பயிராக இருக்கும் என்கிறார் ரவி.