செப்டம்பர் 16, புதுடெல்லி (Agriculture Tips): வெயில் காலம் முடிந்தும் வெப்பம் குறையாமல் இருந்து வருகிறது. ஆங்காங்கு மட்டுமே மழை பொழிவும் காணப்படுகிறது. வெப்ப அலை என்பது இயல்பான வெப்ப நிலையை விட 3 டிகிரி மேல் அதிகமாக இருந்தும் 3 நாட்கள் நீடிக்கும் போது அதை வெப்ப அலை என்பர். இந்த வெப்ப அலை ஏற்படும் போது பயிர்கள் பாதிப்பிற்கு உள்ளாகும். இந்நிலை தொடர்ந்து பயிர்கள் மகசூல் இழப்பதுடன், கருகவும் வாய்ப்புள்ளது.
பயிர்களின் வெப்பத் தாக்கத்தை கட்டுப்படுத்த:
- பயிர்களுக்கு, காலை அல்லது மாலை நேரங்களில் வழக்கத்தை விட சற்று அதிக நேரத்திற்கு நீர்ப்பாசனம் அளிக்க வேண்டும். சொட்டு நீர்பாசனம் தெளிப்பு நீர் பாசனம் பயிர்களுக்கு நல்லது. இது ஆவியாதலைக் கட்டுப்படுத்தும். மேலும் நீரும் வேர்களுக்கு நேரடியாக செல்வதால் வெப்பப் பாதிப்பைக் குறைக்கிறது. World Ozone Day 2024: ஓசோன் அழிந்தால் என்ன நடக்கும்? இன்று உலக ஓசோன் தினம்.!
- வெப்ப அலை உள்ள காலங்களில் பயிர்களுக்கு அடியில் உரம் இடக்கூடாது. வெப்பம் அதிகமான காலங்களில் உரம் இடுவதாலும் வெப்பத் தாக்கத்தாலும், செடிகளில் திசு வளர்ச்சி தடைபட்டு கருகத் தொடங்கிவிடும். அச்சமயங்களில் இலை வழியில் உரங்களை அளிக்கலாம்.
- இடைவேளை அதிகம் விட்டு நடவு செய்திருக்கும் பயிர்களை காக்க நிலத்தில் வைக்கோல் கூளம் போட்டு வைக்கலாம். இது வெப்பத்திலிருந்து நிலத்தைக் காப்பதுடன் களைகளையும் வர விடாது.
- வெப்ப அலையிலிருந்து செடிகளுக்கு வறட்சி தாங்கும் சக்தியை அதிகரிக்க, மெத்தைலோ பாக்டீரியாவை, ஒரு லிட்டர் தண்ணீரில் 20 மிலி வீதம் கலந்து காலை அல்லது மாலையில் செடிகளுக்குத் தெளிக்கலாம். இது வறட்சியைத் தடுப்பதுடன் 10% மகசூலை அதிகரிக்கும்.
- நீராவி போக்கை கட்டுப்படுத்த 5% கயோலின் என்னும் களிமண்ணை தண்ணிரில் கலந்து நிலத்தில் தெளிக்கலாம். இது ஈரப்பதத்தை நிலத்தில் தக்க வைக்க உதவும்.
- வெப்பம் அதிகமுள்ள பகல் நேரங்களில் களை எடுக்கவோ கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பவோ கூடாது.