ஆகஸ்ட் 07, சென்னை (Kitchen Tips): வீட்டிலேயே சுவையான வெண்ணிலா கப் கேக் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பிடிக்கும். வாங்க அதனை செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
பால் - 1 கப்
எண்ணெய் - ½ கப்
சர்க்கரை - ¾ கப்
வினிகர் - 1 ஸ்பூன்
வெண்ணிலா எசன்ஸ் - 1 ஸ்பூன்
மைதா - 1.25 கப்
கோகோ பவுடர் - ½ கப்
பேக்கிங் பவுடர் - ½ ஸ்பூன்
பேக்கிங் சோடா - ¼ ஸ்பூன்
உப்பு Thengai Mittai Recipe: குழந்தைகளுக்கு பிடித்தமான தேங்காய் மிட்டாய் செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
செய்முறை:
பாலில், எண்ணெய், வினிகர், வெண்ணிலா எசன்ஸ் (Vanilla), சர்க்கரை சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும். அதனுடன் மைதா, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு இவைகளை ஒன்றாக சேர்த்து இதில் போட்டு கலந்து கொள்ளவும். இவைகளை கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கி வைத்துக் கொள்ளவும். குக்கரில் சர்க்கரை அல்லது உப்பை அரை கப் கொட்டி அதில் ஒரு கனமான தட்டை வைத்து ரப்பர் போட்டாமல் மூடியை போட்டு சூடுபடுத்த வேண்டும்.
பின் சிறிய கிண்ணங்களில் எண்ணெய் தடவி கப் கேக் பேப்பர் வைத்து, செய்து வைத்த கலவையை அதில் ஊற்ற வேண்டும். பின் அந்த கிண்ணங்களை குக்கரினுள் வைத்து பூட்டி 30 நிமிடத்திற்கு வேக விட வேண்டும். பிறகு அதை வெளியே எடுத்து திருப்பினால் கப் கேக் (Cup Cake) ரெடி. அதன் மேல் தங்களுக்கு பிடித்த கிரீமை போட்டு சுவைக்கலாம்.