ஆகஸ்ட் 06, சென்னை (Kitchen Tips): குழந்தைகளுக்கு பிடித்தமான இனிப்பு வகைகளை வீட்டிலேயே செய்து கொடுத்தால், அதனை விரும்பி சாப்பிடுவர். அந்தவகையில் தேங்காய் மிட்டாய் (Thengai Mittai) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
தேங்காய் - 6
சர்க்கரை - 2 கிலோ
பொட்டுக்கடலை - 200 கிராம்
ஏலக்காய் - 15. Egg Bhurji Recipe: முட்டை இருக்கா? அப்போ உடனே இந்த மாதிரி செஞ்சு அசத்துங்க..!
செய்முறை:
முதலில் தேங்காயை (Coconut) உடைத்து அதனை துருவி எடுத்துக் கொள்ளவும். பின்பு அதை ஒரு மணி நேரம் வரை உலரவிடவும், பின் மிக்ஸியில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ளவும்.
சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, சர்க்கரை கரையும் வரை மிதமான சூட்டில் வைத்து கிளறிவிட வேண்டும்.
அடுத்து, தேங்காய் துருவலை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும். பின் பொட்டுக்கடலை, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் நன்றாக நுரைத்து பொங்கி வரும் பதத்தில், அதனை இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டவும். பதம் சரியாக இருந்தால் மிட்டாய் துண்டு நன்றாக வரும்.
பின் அதனை ஆறவிட்டு சிறு சிறு மிட்டாய் துண்டுகளாக வெட்டவும். அவ்வளவுதான் இனிப்பான தேங்காய் பர்பி ரெடி.