
பிப்ரவரி 18, சென்னை (Kitchen Tips): இட்லி மாவு, தோசை மாவு, இல்லாத போது இட்லி வேண்டும் என்றால் கவலை வேண்டாம். ஒரு கப் ரவையை வைத்து மெத்தென்ற சுவையான ரவா இட்லியை செய்யலாம். எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ரவை-1கப்
தயிர்-1கப்
உப்பு-தேவையான அளவு
பேக்கிங் சோடா-சிறிது
எண்ணெய்-2 ஸ்பூன்
கடுகு, உளுந்த பருப்பு, கடலை பருப்பு-1/2 ஸ்பூன்
இஞ்சி- பொடியாக நறுக்கியது
கருவேப்பிலை, மல்லி இலை பொடியாக நறுக்கியது Chapathi Gravy Recipe: சப்பாத்திக்கு ஏற்ற சுவையான கிரேவி செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
செய்முறை:
அடுப்பில் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஆன் பண்ணி விடவேண்டும். தட்டில் எண்ணெய் தடவி வைத்து கொண்டு தான். மறுபக்கம் ரவையை கலக்க வேண்டும். இல்லை என்றால் ரவை ஊறிவிடும். கிண்ணத்தில் ரவையுடன், தாளித்த பொருட்களை போட்டு, தயிர், தண்ணீர் கொஞ்சம் கலந்து, உப்பு, சோடாப்பு கொஞ்சம் போட்டு, மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். உடனே தட்டில் ஊற்றி வேக வைக்கவும். சுவையான இட்லி ரெடி.