
மார்ச் 04, சென்னை (Kitchen Tips): போண்டா பிரியர்களுக்காக பலவிதமான ரெசிபிகள் உள்ளன. அந்தவகையில், வீட்டிலேயே சுவையான ரவை மைதா போண்டா எப்படி செய்வது என்பதனை இப்பதிவில் பார்ப்போம். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.
தேவையான பொருட்கள்:
ரவை- 1 கப்
மைதா - 1 கப்
சீனி- 1 கப்
சமையல் சோடா- 1 பிஞ்ச்
கடலை எண்ணெய்- தேவைக்கு
தண்ணீர்- தேவைக்கு Uppu Kolukkattai Recipe: சுவையான உப்பு கொழுக்கட்டை செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
செய்முறை:
முதலில் ரவையை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொஞ்சம் தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். பின் மைதாவையும் சேர்த்து கொஞ்சம் தண்ணீர்விட்டு நன்கு கலந்து ஊற வைக்கவும். இரண்டும் குறைந்தது அரை மணிநேரம் ஊற வைக்கவும். 1 மணி நேரம் ஊற வைத்தால் பணியாரம் மெதுவாக இருக்கும். பின் சோடா உப்பு, சீனி சேர்க்கவும். இட்லிமாவு பதத்துக்கு மாவுஇருக்கும் படி பார்த்துக்கொள்ளவும். பின் வாணலியை அடுப்பில் வைத்து ஒரு பணியார மாவு ஊற்றி அது மேலே வந்ததும் அடுத்து ஊற்றவும். அடுப்பை குறைத்து வைத்து சுடவும். ரொம்ப நன்றாக அழகாக மேலே வரும். மெதுவாகவாகவும் ருசியாகவும் இருக்கும்.