அக்டோபர் 29, சென்னை (Kitchen Tips): தீபாவளி வரப் போது ட்ரஸ் எடுத்தாச்சா, பட்டாசு வாங்கியாச்சா, என்ற கேள்வியுடன் இப்போது தீபாவளிக்கு என்ன என்ன இனிப்பு செய்யலாம் என்ற கேள்வியையும் சேர்த்துக்கொள்வோம். முன்பெல்லாம் தீபாவளி வந்து விட்டால் இரண்டு வாரத்திற்கு முன்பே பலகாராத்திற்கான முன்னேற்பாடுகள் செய்யத் தொடங்கி விடுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் தீபாவளியன்று கடைக்கு சென்று இனிப்பு பெட்டி வாங்கி வந்து விடுகின்றனர். ஒரு சில வீடுகளில் மட்டுமே பலகாரங்கள் செய்கிறார்கள். இவ்வருட தீபாவளியை முறுக்கு, மிக்சர், ஜாமூன், இவற்றுடன் மட்டுமே நிறுத்தி விடாமல் சிறு தானியத்தில் சில இனிப்பு வகைகளையும் செய்து இத்தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம். இப்பதிவில் வரகு உக்கரை (Varagu Ukkarai) எப்படி செய்வது என்பதனை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
வரகு அரிசி - 1/4 கப்
பாசிபயறு – கால் கப்
ரவை – 2 ஸ்பூன்
அரிசி மாவு – 2 ஸ்பூன்
தேங்காய் – 2 ஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
முந்திரி – ஒன்றரை டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 1 ஸ்பூன்
நெய் – 4 டேபிள்
வெல்லப்பாகு செய்ய தேவையானவை
வெல்லம் – அரை கப்
தண்ணீர் – கால் கப் Sweet Potato Halwa Recipe: சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு அல்வா செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
செய்முறை:
150 கிராம் வரகு அரிசியையும் 100 கிராம் பாசிப்பருப்பையும் வெறும் வானளியில் தனித்தனியாக வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் சூடு ஆறியதும் அரைத்து எடுக்க வேண்டும். பின் 200 கிராம் வெல்லத்தை கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி உருக்கி, வடிக்கட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அரைத்து வைத்த வரகு அரிசி, பாசிப்பருப்பு கலவையை குக்கர் அல்லது வானளியில் 3 டம்ளர் தண்ணீர் வைத்து வேகவிடவும்.அவ்வப்போது அடிபிடிக்காமல் மிதமான சூட்டில் கிளரி விட வேண்டும்.
நன்கு வெந்த பின் வெல்லக்கரைசலை மெதுவாக ஊற்ற வேண்டும். கை விடாமல் வெல்லப்பாகு உக்காரையுடன் கலக்கும் வரை கிளர வேண்டும். அல்வாவிற்கு கிளருவது போல் அதனுடன் ஏலகக்காய்ப் பொடி, நெய் 4 தேக்கரண்டி விட்டு கிளர வேண்டும். பின் நெய் வாசனையுடன் திரண்டு வெளி வரும். அதனுடன் நெய்யில் வறுத்தெடுத்த முந்திரி திராட்சை சேர்க்க வேண்டும். அடுப்பை இறக்கியவுடன் தேவைப்பட்டால் தேங்காய் துருவலைப் போட்டு பரிமாரலாம்.