செப்டம்பர் 26, சென்னை (Kitchen Tips): வெந்தய விதையில் புரதம், தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் மிகுந்து காணப்படுகின்றன. அதனால் வெந்தயம் மலச்சிக்கலை நீக்குவதோடு, கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. மற்றும் இதய நோய்களின் அபாயத்தை குறைக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. இப்படி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள வெந்தயத்தில் சுவைமிகுந்த வெந்தயக் குழம்பு (Vendhaya Kulambu Recipe) எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

அரிசி – ஒரு தேக்கரண்டி

சீரகம் – ஒரு தேக்கரண்டி

மிளகு – அரை தேக்கரண்டி

வெந்தயம் – 2 தேக்கரண்டி

நல்லெண்ணெய் – 50 மில்லி லிட்டர்

கடுகு – ஒரு தேக்கரண்டி

கருவேப்பிலை – கைப்பிடி அளவு

சின்ன வெங்காயம் – 10

தக்காளி – 2

குழம்பு மிளகாய்த்தூள் – 4 தேக்கரண்டி

புளி – எலுமிச்சை பழ அளவு

உப்பு மற்றும் தண்ணீர் – தேவையான அளவு World Environmental Health Day 2024: "இழந்தபின் இயலுமா சுற்றுச்சூழலைச் சீரமைக்க?" உலக சுற்றுச்சூழல் ஆரோக்கிய தினம்..!

செய்முறை:

முதலில் ஒரு கடாயில் அரிசி, மிளகு, , சீரகம், வெந்தயம் சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்த இந்த பொருட்களை சிறிது நேரம் ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும். அதே கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும், கடுகு நன்கு வெடித்ததும் அதில் கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும். அதன்பின் நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை இதில் சேர்த்துக் கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இரண்டு தக்காளிகளை மையாக அரைத்து இந்த கலவையில் சேர்த்துக் கொள்ளவும். தக்காளியும் வெங்காயமும் நன்கு வதங்கியதும் மூன்று தேக்கரண்டி குழம்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.

மிளகாய் தூளின் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கினால் போதுமானது. இதை அடுத்து நாம் அரைத்து வைத்திருக்கும் வெந்தய பொடியை சேர்த்து வதக்க வேண்டும். அடுத்ததாக புளி கரைத்து இந்த கலவையினுள் சேர்க்க வேண்டும். இப்பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம். இந்த கலவையை நன்கு கலந்து கொடுத்து மிதமான தீயில் 15 முதல் 20 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். கடாயின் ஓரங்களில் எண்ணை பிரிந்து வந்தால் வெந்தய குழம்பு தயாராகிவிட்டது. இந்த வெந்தய குழம்பு சுடு சோற்றுடன் வைத்து சாப்பிடும் பொழுது மிக அருமையாக இருக்கும். மேலும் இந்த குழம்பை நான்கு, ஐந்து நாட்களுக்கு மேல் பதப்படுத்தியும் சாப்பிடலாம்..