செப்டம்பர் 26, புதுடெல்லி (Special Day): உலக சுற்றுச்சூழல் ஆரோக்கிய தினம் (World Environmental Health Day) ஆண்டுதோறும் செப்டம்பர் 26 அன்று அனுசரிக்கப்படுகிறது. சுத்தமான காற்று, நீர், சுகாதாரம், மாசுக்கட்டுப்பாடு மற்றும் கழிவு மேலாண்மை போன்ற முக்கிய பிரச்சினைகளை கையாள்வது, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது.

வரலாறு: சுற்றுச்சூழல் ஆரோக்கியத்திற்கான சர்வதேச கூட்டமைப்பு (IFEH) 2011 இல் உலக சுற்றுச்சூழல் ஆரோக்கிய தினத்தை நிறுவியது. இந்த நாள் மனித செயல்கள் நமது சுற்றுச்சூழலுக்கு மாற்ற முடியாத சேதத்தை ஏற்படுத்துவதால், நமது உயிர்க்கோளத்திற்கு மேலும் சேதம் ஏற்படுவதைக் குறைக்க அல்லது தடுக்க வேண்டிய அவசரத் தேவை உள்ளது என்பதை நினைவுறுத்துகிறது. World Contraception Day 2024: உலக கருத்தடை தினம்.. கருத்தடை சாதனங்களை பயன்படுத்தும் முன் இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க..!

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு: தனிப்பட்ட முறையிலும், அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அலுவலகங்களில் பிளாஸ்டிக் தட்டுகள், குவளைகள், பாட்டில்களுக்கு மாற்றாக வேறு பொருள்களைப் பயன்படுத்தப்படுவதையும், உடல் ஆரோக்கியத்துக்கு நடைபயிற்சியையும் ஊக்குவிக்க வேண்டும். காற்று மாசுபாட்டைத் தவிர்க்க பொது போக்குவரத்தையும், மிதிவண்டியையும் பயன்படுத்தலாம். பொது மக்களிடையே பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மின் சிக்கனம், தண்ணீர் சிக்கனம் மற்றும் உணவுப் பொருள்களை வீணாக்காமல் உரமாகப் பயன்படுத்துதல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.