
பிப்ரவரி 18, சென்னை (Chennai News): சனி பெயர்ச்சி 29 மார்ச் 2025 அன்று மீன ராசியில் சனி பூரட்டாதி நான்காம் பாத பிரவேசத்தில் தொடங்கி , 17 மாறுபட்ட நட்சத்திர சாரங்களில் சனி சஞ்சாரம் நிகழ்கிறது சனி பகவான் மீன ராசியில் ஜூன் 3 , 2027 வரை சஞ்சாரம் செய்கிறார். இந்த கால கட்டத்தில் அதாவது 29 மார்ச் 2025 முதல் ஜூன் 3 , 2027 வரை உள்ள காலத்தில் சனி மீனத்தில் சஞ்சாரம் செய்யும் காலத்தில் மகரம் ராசியில் பிறந்தவர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள் பார்க்கலாம்.
மகரம் சனி பெயர்ச்சி பலன்கள் ():
மகர ராசி உத்திராடம் நட்சத்திரம் நண்பர்களுக்கு சனி பெயர்ச்சி பலன்கள்:
கழுத்தை இறுக்கிக் கொண்டிருந்த கயிறு எங்கே போனது என்று தெரியாத அளவுக்கு நிவாரணம் அதிகமாக இருக்கும். மனதை மிகவும் அழுத்திக் கொண்டிருந்த மனத் துயரங்கள் எல்லாம் விலகி ஓடிவிடும். அதிகம் தோல்விகளைச் சந்தித்தவர்கள் அதை ஈடு கட்டும் விதமாக வெற்றியைச் சந்திப்பார்கள். இதுவரை பலமுறை தட்டிப் போன பதவி உயர்வு கைக்கு கிடைக்க வேண்டிய அதிகாரம் யாரிடமும் பறி கொடுத்துவிட்ட அங்கீகாரம் இவை அனைத்தும் தானாக தேடி ஓடி வந்து உங்கள் கைகளில் தஞ்சமடையும். திருமணத்திற்கு முயற்சியே செய்யாமல் இருந்தாலும் திடீரென நல்ல வாழ்க்கை துணை தேடி வந்து அமைந்து திருமண வாய்ப்புகள் கைகூடி வரும். திட்டத்திலேயே இல்லாத படிப்புகள் கல்வி மேம்பாடு இவற்றின் மீது திடீரென ஆர்வம் உண்டாகி அவற்றை நோக்கி முயற்சிகள் நகரும்; வெற்றியும் கிடைக்கும். இனிமேல் கிடைக்கவே போவதில்லை என்று நினைத்துக் கொண்டிருந்த வசூலாகாத கடல்கள் தானாக வசூலாக தொடங்கும் .எதிர்பார்த்து காத்திருந்த கடன் உதவிகள் தானாக கைக்கு வந்து சேரும்.
நீண்ட நாட்களாக தொந்தரவு செய்து கொண்டிருந்த உடல் நலம் சீராகி மிகவும் நல்ல நிலைக்கு மேம்படும். மருத்துவ சிகிச்சை இல்லை என்ற நிலைக்கு கைவிடப்பட்ட சிலருக்கு அது அப்படி இல்லை என்று அதிசயமாக எதிர்பாராத இடத்திலிருந்து சிகிச்சை உதவி கிடைத்து போய் முற்றிலும் குணமாகும். சொத்து மற்றும் கடன் தொடர்பான வழக்கு வில்லங்கங்கள் அனைத்தும் தீர்ந்து போய் சாதகமான நிலை உருவாகும். இதன் காரணமாக புதிய சொத்துகள் வாங்கவும் புதிய முதலீடுகள் செய்வதற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். அதிகாரம் மிக்க பதவிகள் பொறுப்புகள் தேடி வரும்.மிக நல்ல செய்தி ஒன்று கிடைக்கும். பொருள் ஆபரணங்கள் வாங்குவீர்கள். இதுவரை இல்லாத மன நிம்மதியான காலமாக இந்த காலம் அமைந்திருக்கும் என்று நிச்சயமாக சொல்லலாம் .புதிய திட்டங்களை நீங்களாகவே யோசித்து செயல்படுத்த தொடங்குவீர்கள். Sani Peyarchi Palan 2025: சனிப் பெயர்ச்சி 2025: விருச்சிகம் ராசிக்கு ஏழரை சனி எப்படி இருக்கப் போகுது தெரியுமா? விபரம் உள்ளே.!
மகர ராசி திருவோணம் நட்சத்திர அன்பர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்:
உங்கள் வாழ்க்கையை முற்றிலும் மாற்றி அமைக்கக்கூடிய சனி பெயர்ச்சி காலம். அதிக நன்மைகளைச் சந்திப்பீர்கள். வசதி உள்ளவர்களின் தோழமை கிடைத்து அவர்கள் உங்களுக்காக பணம் முதலீடு செய்வார்கள். இவர்களை நம்பலாமா வேண்டாமா என்ற அளவில் பலரைக் குறித்து இருந்த சந்தேகங்கள் விலகி யாரை நம்பலாம் யாரை நம்ப வேண்டாம் என்ற தெளிவு கிடைத்து அதற்கு ஏற்ப முடிவு எடுப்பீர்கள். விளையாட்டு, கலை, கேளிக்கை இவற்றை தொழிலாக கொண்டவர்கள் மகர ராசியாக இருந்து அதிலும் திருவோண நட்சத்திரமாக இருந்தால் அதிக லாபம் அடைவார்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டுத்தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அனுகூலமான காலம் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஏற்றும் தொழிலில் ஈடுபடுவீர்கள் அல்லது புத்தியை பயன்படுத்தி முதலீடு குறைவாக இருந்து அதிக லாபம் ஈட்டும் கன்சல்டிங் போன்ற தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு மிகவும் லாபகரமான காலம் இது. சிக்கலாக இழுத்தடித்துக் கொண்டிருந்த வழக்குகள் சீக்கிரமாக முடிவுக்கு வரும். முடிவும் உங்களுக்கு சாதகமாகஇருக்கும். திருமண தடை நீங்கும் திருமண பாக்கியம் கைகூடும்.
சனி உத்திரட்டாதி சாரத்தில் சஞ்சாரம் செய்யும் போது எதிர்ப்புகளும் சவால்களும் தோன்றும் சமாளிக்க முடியாத அளவுக்கு சங்கடங்கள் உருவாகும், கவனக் குறைவாக இருந்தால் கடன் தொல்லை மிகுதியாக தொந்தரவு செய்யும். அதுவரை லாபமாக நடந்து கொண்டிருந்த விஷயங்கள் திடீரென நஷ்டத்தை நோக்கி திசை திரும்பி மனத்தூயரை அதிகரிக்கும். உறவுகளின் திடீரென்று திருப்புங்கள் சனி உத்திரட்டாதி சாரத்தில் சஞ்சாரம் செய்யும் போது உருவாகும். இந்த காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சனி உத்திரட்டாதி சாரத்தில் இருக்கும்போது குழப்பங்கள் அதிகரித்து தேவையில்லாத செலவுகளை உருவாக்கி அல்லது லாபம் இல்லாத முதலீடுகளில் ஈடுபடத் தூண்டுவார். சனி உத்திரட்டாதி சாரத்தில் சஞ்சாரம் செய்யும் போது மகர ராசி திருவோணம் நட்சத்திரம் நண்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அமைதியை காக்க வேண்டும். அதேநேரம் தகுதியான நேரத்தில் சமயம் பார்த்து பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இருக்கும், தங்களை விட வயதில் மூத்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் தன்மை காணப்படுகிறது.
மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் முதலாம் பாதம் மற்றும் இரண்டாம் பாதத்தில் பிறந்த நண்பர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்:
மழை நின்று விட்டது ஆனால் தூவானம் விடவில்லை என்று சொல்லுவது போல் முற்றிலும் துன்பங்கள் தொலைந்து போய்விடவில்லை, அவை கொஞ்சம் கொஞ்சமாக தலை காட்டிக் கொண்டே இருக்கும் காலகட்டம். சொந்த வாழ்க்கையில் உறவினர்கள் நச்சரிப்பு அதிகமாக இருக்கும் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் உருவாகி அடிக்கடி பிரிவினை தோன்றும். கணவன் மனைவி உறவு கசப்புடன் இருக்கும். குழந்தைகளின் எதிர்காலத்தை ஒட்டி அடிக்கடி சங்கடமான சண்டைகள் வீட்டில் வரும். பெரியவர்களுக்கு இருப்பதைக் காட்டிலும் வயதில் சிறியவர்களுக்கு குறிப்பாக மாணவர்களுக்கு கஷ்டங்கள் குறைவாகவே இருக்கும் மாணவர்கள் உற்சாகத்துடன் காணப்படலாம் அவர்களுக்கு முன்னேற்றமான காலம் என்று சொல்ல வேண்டும். வேலை பார்க்கும் இடத்தில் பொறாமை இருக்கும். பகை உணர்வு கொண்டவர்கள் உங்களை சிக்கலில் மாட்டி விடுவார்கள், அதில் இருந்து மீண்டு வருவதற்கு அதிகம் செலவு அல்லது சிக்கல்களை சந்தித்து பிறகு வெளியில் வர வேண்டி இருக்கும். அதிகம் விரையம் ஆகும்
சனி உத்திரட்டாதி சாரம் அடையும்போது நிலைமை மாறிவிடும். சாதகமான காலமாக மாறிவிடும் இழப்புகளை சரிகட்டும் அளவிற்கு வருமானம் உயர்ந்து விடும் பதவி உயர்வு கிடைக்கும். அங்கீகாரம் கிடைக்கும் வெளிநாட்டு வாய்ப்புகள் தேடி வரும். உடல் நலத்தில் முன்னேற்றம் இருக்கும். ஆனாலும் மருத்துவ செலவுகள் அதிகமாக இருக்கும். இடப்பெயர்ச்சி உத்தியோகம் மாற்றம், ஊர் விட்டு ஊர் மாற்றமடைதல் டிரான்ஸ்பர் போன்றவை எதிர்பார்க்கலாம். இந்த மாற்றம் அனுகூலமான பலன்களை கொண்டு வந்து சேர்ப்பதாகவும் இருக்கும். பெரிய அளவில் இல்லாவிட்டாலும் சிறிய அளவில் முதலீடுகள் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கும். கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ஆதாயமான காலம் என்று சொல்லலாம். சீருடை பணியாளர்களான காவல்துறை அல்லது ஊர்க்காவல் படை அல்லது தீயணைப்புத்துறை அல்லது ராணுவம் அல்லது ஏனைய படை பிரிவுகளில் வேலை செய் பார்க்கும் நண்பர்களுக்கு அதாவது அவிட்ட நட்சத்திரம் முதல் 2 பாதத்தில் பிறந்த இந்த நண்பர்களுக்கு எதிர்பாராத இடங்களில் வேலை பார்க்க அவசியம் உருவாகும்; அது சவால்களை அதிகமாக கொண்டு வந்து சேர்க்கும். விருப்ப ஓய்வு பெற்று விடலாமா என்று யோசிக்க வைக்கும். தானாக முன்வந்து பணி ஓய்வு பெறும் வாலண்டரி ரிட்டயர்மென்ட் போன்ற விஷயங்களை மனதில் யோசிக்கலாம். ஆனால் செயல்படுத்தாதீர்கள்