Dead Cockroach Found In Food (Photo Credit: @iamdrkeshari X)

பிப்ரவரி 07, மத்தியப் பிரதேசம் (Madhya Pradesh): கடந்த பிப்ரவரி 1ம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ராணி கம்லாபதியில் இருந்து ஜபல்பூர் சந்திப்புக்கு, வந்தே பாரத் ரயிலில் (Vande Bharat train) சென்ற பயணி டாக்டர் ஷுபேந்து கேசரி, இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) வழங்கிய உணவில் கரப்பான் பூச்சி (Cockroach) இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தொடர்ந்து இவர், ஜபல்பூர் ரயில் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்தார். பின்னர் இவர், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் தனக்கு வழங்கப்பட்ட அசைவ உணவில் இறந்த கரப்பான் பூச்சி இருந்த படத்தையும், ஜபல்பூர் ரயில் நிலையத்தில் அவர் அளித்த புகாரையும் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். இந்த பதிவானது இணையம் முழுதும் வைரலாகியது. First 3D-Printed Brain Tissue: உலகின் முதல் முப்பரிமாண மூளை... மனித மூளையைப் போன்றே வேலை செய்யுமாம்..!

அதனைத் தொடர்ந்து, இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டும், சம்பந்தபட்ட சேவை வழங்கினருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, இனி கண்காணிப்பு பலப்படுத்தப்படும் என்றும் ஐஆர்சிடிசி (IRTC) தனது எக்ஸ் பதிவில் அந்த பயணிக்கு பதிலளித்துள்ளது.