ஜூலை 17, சென்னை (Health Tips): சீசன் காலங்களில் ஒவ்வொரு ஊர்களிலும் விற்பனை செய்யப்படும் நாவல் பழங்கள் தென்னிந்திய பகுதிகளில் ஏராளமாக விளைகின்றன. நாவல் மரத்திற்கு நாக மரம் என்ற பெயரும் உண்டு. இந்தியாவில் வறண்ட இடங்களை தவிர்த்து பிற இடங்களில் வளரும் தன்மை கொண்ட நாவல் பழம் இலங்கை, மியான்மர், மலேசிய நாடுகளிலும் இருக்கின்றன. இலங்கையை பொறுத்தவரையில் புத்த மத கோவில்களில் பெரும்பாலும் நாவல் மரங்கள் அதிகம் இருக்கும்.
மருத்துவர்கள் கூறுவது என்ன?
ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நாவல் பழம் கிடைக்கும். துவர்ப்பு, இனிப்பு கொண்ட நாவல் பழம் கருநீல தோற்றத்தில் இருக்கும். இது மூளைக்கு பலம் தரும் பழம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். கல்லீரலை குணமாக்கும் தன்மை கொண்ட நாவல் பழம், சிறுநீரகத்தையும் நன்கு இயங்க வழிவகை செய்கிறது. நாவல் பழம் சாப்பிடுவதால் குடல் நன்கு இயங்கி செரிமான சக்தியும் அதிகரிக்கும். வானிலை: 7 மாவட்டங்களில் வெளுத்துக்கட்டும் கனமழை.. இன்றைய வானிலை நிலவரம் இதோ.!
கர்ப்பிணிகள் கவனம் :
நாவல் பழத்தை சாறு போல குடித்தால் வாயு தொல்லை நீங்கும். மண்ணீரல் வீக்கமும் குணமாகும். நாவல் பழச்சாறுடன் தேன் கலந்து குடிக்க வயிற்றுக்கடுப்பு சரியாகும். நாவல் பழம் கண்ணுக்கு குளிர்ச்சி தரும் தன்மை கொண்டதாகும். ரத்தத்தினை சுத்தம் செய்யும். இதனை அதிகம் சாப்பிடுவது சளி, காய்ச்சல், தொண்டை கட்டு போன்றவை ஏற்படுத்தலாம் என்பதால் கவனம் தேவை. அதேபோல கர்ப்பிணிகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம் என்பதால் கர்ப்பிணிகள் இப்பழத்தை தவிர்ப்பது நல்லது.