Walking (Photo Credit: Pixabay)

ஜூலை 26, சென்னை (Health Tips): தினமும் வேலை பார்த்து, ஓயாத உழைப்பை வெளிப்படுத்தி வரும் இன்றைய உலகில் எந்த விஷயத்திற்கும் நேரம் என்பது இல்லை. இன்றுள்ள அவசரகாலத்தில் குறைந்தபட்சம் நடைப்பயிற்சி செய்வதன் வாயிலாக உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது அனைவருக்கும் தெரிந்தாலும், அதனை மேற்கொள்ள இயலாமல் இருக்கின்றனர். ஒருவர் ஆரோக்கியமான வாழ்க்கையை விருப்பினால், தினமும் குறைந்தபட்சம் 10000 அடி நடக்க வேண்டும்.

நடைப்பயிற்சி (Walking) செய்யுங்கள்:

குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 5000 - 7000 தூரம் வரை நடக்க வேண்டும். உடல் எடையை பக்கவிளைவு இல்லாமல் குறைக்க சர்வதேச அளவில் நடைப்பயிற்சி பரிந்துரை செய்யப்படுகிறது. சாப்பிட்ட பின்பு நாம் பொதுவாக அப்படியே அமருவது அல்லது உறங்குவது போன்றவற்றை செய்வோம். ஆனால், இவ்வாறான செயல்முறை ஆரோக்கியத்திற்கு தீங்கு தரும். இதனால் சாப்பிட்டதும் சிறிது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். Cowpea Curry Recipe: தட்டப்பயறு குழம்பு மணக்க மணக்க இப்படி செய்ங்க.. எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க..! 

செரிமானத்தை மேலோங்கும்:

ஒவ்வொருமுறை நாம் சாப்பிட்டபின் சிறிது நடப்பது உடலின் ஆரோக்கியத்திற்கு வழிவகை செய்யும். நோய்களை குறைக்க நாளொன்றுக்கு 100 நடைகளாவது குறைந்தபட்சம் மேற்கொள்ள வேண்டும். நேரத்திற்கு உடலுக்கு தேவையான அளவு உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சாப்பிட்டதும் நாம் சிறிது நடப்பது செரிமான பிரச்சனையை தவிர்க்க உதவி செய்யும். உணவு சாப்பிட்டபின் நடைப்பயிற்சி செய்வது செரிமானத்தை மேலோங்க வைக்கும்.

கலோரிகள் எரிக்கப்படும்:

விறுவிறுப்புடன் கொண்ட நடைப்பயிற்சி உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவும். இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவி செய்யும். உடற்பருமன் சார்ந்த பிரச்சனைகளை குறைக்க உதவும். இதயநோய் மற்றும் பக்கவாதம் சார்ந்த பிரச்சனைகளை குறைக்க உதவும். இதனால் சாப்பிட்ட பின்பு குறைந்தது 30 நிமிடம் நடக்க வேண்டும். உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்படுவதால், உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

நடைப்பயிற்சி செல்லாததால் ஏற்படும் பிரச்சனை:

அதேபோல, உணவு சாப்பிட்டதும் அதிக நீர் குடிக்க கூடாது. உணவு செரிமானத்தை இது மந்தமாக்கும், உடல் பருமணமாகவும் வழிவகை செய்யும். தாகம் அல்லது விக்கல் போன்றவற்றின்போது சிறிதளவு நீர் குடிப்பது நல்லது. அதேபோல, சாப்பிட்டதும் உறக்கம் வேண்டாம். இது உடலில் கொழுப்பை அதிகரிக்க வழிவகை செய்யும், வளர்சிதை மாற்றத்தை குறைக்கும், உணவு செரிமானத்தில் பிரச்சனையை உண்டாக்கும்.