
மார்ச் 10, சென்னை (Health Tips): பொதுவாக கோடையில் உடலில் ஏற்படும் அதிக வெப்பநிலையையில் வறட்சியையும் தடுப்பதற்காக பழச்சாறுகளை தண்ணீரையும் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். இவைகளை விட வெப்பத்திலிருந்து உடலை பாதுகாப்பதில் மோர் சிறந்ததாக இருக்கிறது. அதிக செலவும் இல்லாத மோரை தினமும் பருகுவதால் உடலுக்கு மிக பயனுள்ளதாக இருக்கிறது. மோர் குடித்தால் சளி பிடித்து விடும் என பலரும் இதை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் மோர் மழை, பனி காலங்களிலும் குடிக்கலாம். First Night Tips: தாம்பத்ய வாழ்க்கை இனிக்க.. மெல்ல மெல்ல தொடுங்கள்...!
மோர் குடிப்பதால் வரும் நன்மைகள்:
- கோடையில் மோர் பருகுவதால் சீரான வெப்பனிலையை பாரமரித்து உடலை குளிர்ச்சியாக வைக்கிறது.
- உடலில் வறட்சி இல்லாமல் நீரேற்றத்துடன் வைக்கிறது.
- மோரில் இஞ்சி கலந்து குடிக்கையில், வயிற்றுப் போக்கு, வயிறு உப்பசம் போன்ற வயிறு சார்ந்த பிரச்சனைக்கு தீர்வளிக்கிறது.
- கல்லீரல் மற்றும் உடலின் நச்சுக்களை நீக்குகிறது.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- ரத்த அழுத்தம் மற்றும் இதயத்தை பாதுகாக்கிறது.
- கால்சியம், வைட்டமின் பி, பொட்டாசியம், மக்னீசியம் மேலும் பல புரதசத்துக்கள் இருக்கின்றன.
- உடல் எடையைக் குறைப்பதில் பங்களிக்கிறது.
- தினமும் மோர் அருந்துவதால் முடியையும் சருமத்தையும் ஈரப்பதமாக வைக்கிறது. இதனால் வறட்சியால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
வெயில் தாக்கத்தை தவிர்க்க வெளியில் செல்வதற்கு முன் மோர் அருந்தி விட்டு செல்லலாம். மோருடன் புதினா, இஞ்சி சேர்த்துப் பருகலாம். காரம் விரும்புபவர்கள் பச்சை மிளகாய் அல்லது மசாலா, உப்பு சேர்த்து அருந்தலாம். மேலும் லிச்சி பழம், நுங்கு, இளநீர் போன்றவைகளுடன் சேர்த்து அறைத்து லஸி செய்தும் குடிக்கலாம்.