Hug Day (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 28, சென்னை (Chennai News): ஆயிரம் இரவுகள் வாழ்க்கையில் வந்தாலும், இதுதானே அவர்களுக்கு முதலிரவு! ஒரு பக்கம் எதிர்ப்பார்ப்புகளும் உள்ளக் கிளர்ச்சியும், மறுபக்கம் அச்சமும் படபடப்பும். முதலிரவுக்கு முன்பாக பெரும்பாலான புதுமணத் தம்பதிகளின் நிலை இதுதான்.

மெல்ல மெல்ல தொடுங்கள்

எந்த ஒரு நபரும் ஆரம்பத்திலேயே உடலுறவில் சிறப்பாக செயல்படுகிறவராக இருப்பதில்லை. ஆகவே, மெதுவாகவும் மென்மையாகவும் உறவில் ஈடுபடுங்கள். இருவருக்கும் பிடித்த, அதிகம் சிரமப்படுத்தாத வகையில் அது இருக்கட்டும். நண்பர்கள், இணையம், புத்தகங்கள் வழியாக வாய்வழிப் புணர்ச்சி, ஆசனவாய்ப் புணர்ச்சி போன்ற பலவகையான புணர்ச்சிமுறைகளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அவர்களின் விருப்பங்களை அறிந்துகொள்ளும் முன் இது போன்ற விஷயங்களை முயற்சித்துப் பார்க்க வேண்டாம். First Night Tips: உங்கள் முதலிரவு... இனிய இரவாக... தாம்பத்ய வாழ்க்கைக்கான விதிகள தெரிஞ்சிக்கோங்க.!

முடிந்த அளவுக்கு முன்விளையாட்டுகள் விளையாடுங்கள். துணைவரும் கிளர்ச்சியடையட்டும். பின்னர் இருப்பதில் எளிமையான, வலி குறைந்த உறவுநிலையில் (எ-கா: மிஷினரி பொசிஷன்) உறவைத் தொடருங்கள். ஏதாவது தவறு நடந்தால்கூட அமைதியாக இருந்து, மீண்டும் முயற்சியுங்கள். நினைவிருக்கட்டும், முதல் நாளிலேயே உடலுறவைத் தொடங்க வேண்டுமென்பதில்லை. இது இருவருக்கும் களிப்பூட்டுவதாகவும் இருக்க வேண்டுமானால், இயற்கையாக ஒருவரை ஒருவர் மீது மற்றவருக்கு ஈர்ப்பு ஏற்படும் போதே அது சாத்தியமாகும்.