
பிப்ரவரி 25, சென்னை (Chennai News): கோடையில் அதிக வெப்பத்தினால் கோழிகளின் இறப்பு விகிதம் அதிகமாக வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகளும், கோழி பண்ணை உரிமையாளர்களும் கோழிகள் வெப்பத்தால் பாதிக்கப்படுவதற்கு முன்கூட்டியே கண்டறியந்து அதற்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கோழிகள் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளதா என கண்டறிய சில அறிகுறிகள்:
- கோடைகாலத்தில் கோழிகள் உடலில் வெப்பனிலை அதிகரித்து முச்சு விட சிரமப்படும்.
- கோழிகள், அவைகளின் அலகுகளை அடிக்கடி திறந்து மூடிக்கொண்டு இருக்கும்.
- இயல்பான அளவை விட அதிக அளவு தண்ணீர் குடிக்கும். உடலில் வெப்பம் அதிகரிப்பதால் கோழிகள், தீவனம் குறைந்த அளவு எடுத்து கொண்டு அதிகமாக தண்ணீர் அருந்தும்.
- மேலும் கோழிகளின் எடையும் வளர்ச்சியும் குறையும். வெப்பத்தால் சோர்வாகவே காணப்படும்.
- முட்டை ஓட்டின் தரமும் குறையும். லேசான ஓடுடைய முட்டையை இடும்.
- கோழிகளின் உடலில் வெப்பம் அதிகரித்தால் நடக்க முடியாமல் ஒரே இடத்தில் அமர்ந்து கொள்ளும். இயல்புக்கு மாறாக மண்ணுக்குள் உடலைப் புதைத்துக் கொள்ளும்.
- வெப்பத்தால் பாதிப்படைந்தால் இதயத்துடிப்பு அதிகரித்து, வேகமாக பெருமூச்சு விடும். மூளைக்கு செல்லும் இரத்தம் ஓட்டமும் அதிகரிக்கும்.
- ஏதேனும் கோழி வெப்பத்தால் பாதிப்படைந்ததாக தெரியவந்தால் அதை தனியாக வைத்து பராமரிக்க வேண்டும். Banana Kesari Recipe: சுவையான வாழைப்பழ கேசரி செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
இவைகளைத் தடுக்க:
- அடிக்கடி கோழிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும்.
காலையும் மாலையும் கோழிகளுக்கு தேவையான சத்துள்ள தீவனத்தை அளிக்க வேண்டும். அதிக வெய்யிலில் தீவனம் அளிக்க கூடாது.
- கோழிகளுக்கு அடிக்கடி குடிக்க தண்ணீர் வைக்க வேண்டும்.
கோடையில் கோழிகளுக்கு அதிக காற்றோட்டத்துடன் இட வசதியளிக்க வேண்டும். நாட்டுகோழிகளுக்கு மர நிழலில் கூண்டுகளை அமைக்கலாம்.
- கோழிகள் இருக்கும் பகுதிகளில் அல்லது நிழலான இடங்களில் அவ்வப்போது தண்ணீர் தெளித்து குளுமையாக வைக்க வேண்டும்.
குடிநீரில் வைட்டமின் சி அல்லது பி காம்பிளக்ஸ் மருந்துகளை அளிப்பதன் மூலம் வெப்ப அயர்ச்சியைக் குறைக்கலாம். மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையில் வழங்கவும்.