Hair Loss (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 19, சென்னை (Chennai News): முடிக்கு கவனம் செலுத்துவதுடன் கூந்தலுக்கான தயாரிப்புகளை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். பெண்களிடையே மற்ற புராடெக்டுகளைவிட ஹேர் சீரம், ஹேர் ஸ்ப்ரே இவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன் பயன்களையும் வித்தியாசத்தையும் அறிந்து உபயோகிக்க வேண்டும். மேலும் முடிவகைகளுக்கு ஏற்ப ஹேர் புராடெக்டைப் பயன்படுத்தவேண்டும்.

ஹேர் சீரம்:

ஹேர் சீரம் சிலிகான் அடிப்படையிலான முடிகளில் பயன்படுத்துவதாகும். இது முடிகளில் ஆங்காங்கு ஏற்படும் பிளவுகளையும் வெட்டுகளை கட்டுப்படுத்தி ஆரோக்கியத்தை அளிக்கிறது. அதன் வகைகளின் தன்மைக்கு ஏற்பவே வைக்கிறது. இதைத் தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது முடிகள் பலம்பெறும். இது கூந்தலை வேகமாக சீவும் போது ஏற்படும் சேதத்தையும், மாசு மற்றும் வெப்பத்தால் ஏற்படும் வறட்சி தன்மை, முடி உதிர்வையும் கட்டுப்படுத்துகிறது. விதவிதமான ஸ்டைல்களுக்குப் பயன்படுத்தும் ஹீட்டர்கள், ஸ்ட்ரைட்னரிடமிருந்தும் பாதிப்படையாமல் பாதுகாக்கிறது. சீரம்கள் பிரதிபளிக்கும் தன்மை இருப்பதால் எப்போதும் ஈரப்பதத்துடன் அழகாக காணப்படும். சீரம்கள் ஓரிரு துளிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிகமாகப் பயன்படுத்தினால் கூந்தலுக்கு சேதத்தை விளைவிக்கும். Fish Tank Decorations: மீன் தொட்டிகளை அலங்கரிக்க சில டிப்ஸ் உங்களுக்காக.. கண்டிப்பா இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க.!

ஹேர் ஸ்ப்ரே:

ஹேர் ஸ்ப்ரே என்பது முடிகளின் ஏதேனும் குறிப்பிட்ட ஹேர் ஸ்டைல் வேண்டுமெனில் ஹேர் ஸ்ப்ரேகளைப் பயன்படுத்தலாம். இது முடிகளின் மேல் அடிக்கும் போது பிசுப்பிசுப்பாக பூசுகிறது. இது எந்த ஸ்டைலில் வைக்கிரோமோ அதே ஸ்டைலில் முடி களையாமல் பார்த்துக் கொள்ளும். முடியின் வகை மற்றும் தரத்தைப் பொறுத்து, ஹேர் ஸ்ப்ரேயைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு சிலருக்கு இது ஒவ்வாமைகளை ஏற்படுத்தும். ஹேர் ஸ்ப்ரேயை அடிக்கடி பயன்படுத்தினால், முடி உதிர்தல் மற்றும் முடி பலவீனமடைதல் ஏற்படலாம். ஏனெனில் இதிலுள்ள ரசாயானம் முடியின் வேரில் நேரடியாக படுவதால் இவை ஏற்படுகின்றன. முடிந்த வரை ஹேர் ஸ்ப்ரேகளை வேர்களில் படும்படி நேரடியாக தலையில் தெளிப்பதை தவிர்க்கலாம். மேலும் நீண்ட நேரத்திற்கு ஹெர் ஸ்ப்ரேகள் முடியில் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எப்போதாவது இதைப் பயன்படுத்தலாம்.