மார்ச் 07, சென்னை (Chennai News): லிங்க் அறையை அலங்கரிப்பதே இந்த சோஃபா தான். காய்கறி நறுக்குவது முதல் தூங்குவது வரை, சோஃபாவில் தான் வீட்டில் பாதி வேலைகள் நடக்கும். வீட்டில் அதிக நினைவுகளை கொண்டதும் சோஃபா தான். அதேசமயம் அதிகம் அழுக்காகி சுத்தப்படுத்தாமல் மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் பொருளும் சோஃபா தான். இந்த சோஃபாவை கட்டாயம் அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும்.
சோஃபா சுத்தம்
முதலில் சோஃபா வாங்கும் போது அது பற்றி கொடுக்கப்பட்ட விவரங்களில் சோஃபவை தண்ணீர் கொண்டும் சுத்தம் செய்யலாமா அல்லது கிளீரன்கள் பயன்படுத்த வேண்டுமா அல்லது கெமிக்கல் ஏதேனும் உபயோகப்படுத்த வேண்டுமா என குறிப்பிட்டிருக்கும் அதை தெரிந்து கொண்டு சுத்தம் செய்து வந்தால் சோஃபா வெகு நாட்களுக்கு நீடித்து உழைக்கும். First Night Tips: தாம்பத்ய வாழ்க்கை இனிக்க.. மெல்ல மெல்ல தொடுங்கள்...!
சோஃபா மேல் போடப்பட்டுள்ள அனைத்து பெட்ஷீட்களை எடுத்து விட்டு, மரப்பிரஷ் கொண்டு சோஃபாபை மெதுவாக துடைக்க வேண்டும். மேலிருந்து கீழ்நோக்கி துடைத்து தூசிகளைத் தள்ளிவிட வேண்டும். இந்த பிரஸ்கள் மிகவும் கம்பி போல் இல்லாமல் இருக்க வேண்டும், இல்லையெனில் சோஃபாபில் கீறல் விழுந்து விடும்.
சோஃபாவின் இடுக்குகளில் தான் அதிக குப்பைகள், தூசிகள், உணவுத் துண்டுகள், சாக்லேட் காகிதங்கள், செல்லப்பிராணிகளின் முடி, மினுமினுப்பு போன்ற சிறிய துகள்கள் இருக்கும். இவைகளை அகற்ற, கைகள் அல்லது சிறிய அளவிலான வேக்கம் கிளீனர் ( vacuum cleaner) பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.
தூசிகள் தட்டி எடுத்ததும் உங்கள் சோஃபாவை தண்ணீரோ அல்லது கெமிக்கலோ, எந்த முறையில் துடைத்து சுத்தம் செய்ய வேண்டுமோ அதை பின்பற்றி சுத்தம் செய்ய வேண்டும். மேலும் ஈரத்தை அப்படியே விடாமல் ஹீட்டர் கொண்டு டிரை செய்ய வேண்டும் அல்லது உலர்ந்த துண்டால் துடைத்து ஈரத்தை எடுக்க வேண்டும்.
விடாப்பிடியாக படிந்த கரைகளை நீக்க பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தலாம். சோஃபாவில் கரை படிந்த இடத்தில், பேக்கிங் சோடாவை வினிகரில் கரைத்து அதை தடவ வேண்டும். 10 நிமிடங்கள் அப்படியே விட்டு கழுவ வேண்டும்.அதன் பின்னர் தண்ணீரில் நனைத்த துணி கொண்டு சுத்தம் செய்யலாம். சோஃபாவில் சிறிதாக இருக்கும் கறைகளின் மீது முதலில் டிரை செய்து பார்க்கலாம்.
சோஃபா காய்வதற்காக ஒரு நாள் இரவு முழுவது பயன்படுத்தாமல் உலரவிட வேண்டும். அரையில் காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். காலையில் மீண்டும் ஒரு முரை தட்டி விட வேண்டும்.
சோஃபாவில் ஈரம் சேர்வதால் துர்நாற்றம் எடுக்க அதிக வாய்ப்புண்டு. சோபா சுத்தம் செய்யப் பயன்படுத்தும் தண்ணீரில் வாசனைத் திரவிய சோப்புகளை லேசாக கலந்து கொள்ளலாம். பின் சோஃபாபில் பேக்கிங் சோடாவை ஆங்காங்கு தெளித்து வீடு 20 நிமிடம் கழித்து தட்டி விடலாம். இது துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும்.