Moon (Photo Credit: @SPACEdotcom X)

ஜூலை 18, சென்னை (Technology News): நிலவில் நாசா ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இது தொடர்பாக, காந்த அலைகளின் தரவுகள் மற்றும் பூமியில் உள்ள எரிமலை குழாய்களை ஒப்பிட்டு NATURAL ASTRONOMY என்ற இதழில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், நிலவின் மேற்பரப்பில் குகை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. Andhra Pradesh Horror: 8 வயது சிறுமி பலாத்காரம், கொலை; கஞ்சா போதையில் வெறிச்செயல்.. பிஸ்கட் கொடுப்பதாக நெஞ்சை பதறவைக்கும் துயரம்.!

நிலாவில் குகை: அப்பல்லோ 11 தரையிறங்கும் தளத்திலிருந்து 250 மைல்கள் (400 கிலோமீட்டர்) தொலைவில் சந்திரனின் அமைதிக் கடலில் இந்த குகை அமைந்துள்ளது. மேலும் இது 130 அடி (40 மீட்டர்) அகலமும் 10 கெஜம் நீளமும் சுமார் 100 மீட்டர் ஆழமும் கொண்டது. வரும் காலத்தில் நிலவில் நீண்ட காலம் தங்கி மனிதர்கள் ஆய்வு செய்ய இந்த குகை பெரியளவில் உதவும் என்றே ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். இந்தக் கண்டுபிடிப்பு நிலவில் இதேபோல நூற்றுக்கணக்கான குகைகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதைக் குறிக்கிறது.