அக்டோபர் 22, சென்னை (Health Tips): பெண்ணுறுப்புக்கு நுழைவாயிலாக அமைந்திருக்கும் ஒரு மெல்லிய சதைப்பகுதி தான் கன்னிச்சவ்வு. முதலிரவின் போது அல்லது முதல் முதலாக உடலுறவில் ஈடுபடும் போது இச்சவ்வு சற்றே கிழியும் அல்லது தளர்வடையும். இதனால் சிறிது ரத்தக்கசிவு கூட வரலாம். ஆனால், ஒரு பெண் கன்னித்தன்மை கொண்டவர் என்பதற்கு கன்னிச்சவ்வு கிழியாமல் இருப்பதுதான் ஆதாரம் என்பது அறிவியல் ரீதியாக தவறான கருத்து. இது உண்மையல்ல. தடகளம் போன்ற சில விளையாட்டுகளால், பெண்களுக்கு அவர்களுக்கு தெரியாமலே இச்சவ்வு கிழிந்துவிட்டிருக்கலாம். சுயஇன்பப் பழக்கம் அல்லது டாம்பூன் சானிட்டரி பேட் பயன்படுத்துவதால் அல்லது தெரியாத காரணங்களால் கூட இது கிழிந்துவிடும். எனவே, எந்த விதத்திலும், இதை கன்னித்தன்மைக்கான ஆதரமாக கொள்ள முடியாது. ஆண், பெண் இருவரும் இத்தகவல்களை அறிந்திருப்பது, தேவையில்லாத சந்தேகங்கள் எழுவதைத் தவிர்க்கும்.
நிபுணர்களின் ஆலோசனை:
திருமணத்துக்கு முன்பாக தகுந்த அலோசகர்களிடம் ப்ரீமேரிட்டல் கவுன்சலிங் எடுத்துக்கொள்வது முதலிரவு அச்சங்களை குறைப்பதில் பெரும்பங்கு ஆற்ற முடியும். திருமணம் என்பது வெறும் முதலிரவு மட்டுமல்ல, அதற்கு பிறகு தொடரக்கூடிய அனைத்தும் தான். மறக்க முடியாத இரவை உருவாக்குவது மட்டுமல்ல, மறக்கமுடியாத வாழ்க்கையை இணைந்து உருவாக்குவதன் தொடக்கமும் இதுதான். Kerala Coconut Chammanthi Recipe: கேரளா ஸ்பெஷல் சம்மந்தி சுவையாக செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
சரியான தகவலைப் பெறுங்கள்:
அச்சங்களை தவிர்க்க சரியான வழி அறிவை வளர்த்துக்கொள்வதே. புதிதாக திருமணமான ஆண்களுக்கு விந்து முந்துதல் ஏற்படுவது அனுபவமின்மை மற்றும் பதற்றத்தால் தான் தானே தவிர, சுயஇன்ப பழக்கத்தால் அல்ல. இது பொதுவானதே. அதேபோல, ஆணின் உறுப்பின் அளவைவிட, தன்னை மிகவும் நேசிக்கும் அக்கறைச் செலுத்தும் துணைவரையே பெண் விரும்புகிறார். பெரும்பாலான பெண்கள் உறவின் போது கண்களை மூடிக்கொள்கின்றனர் என்பது உங்களுக்கு தெரியுமா?உடலுறவுக்கு தயாராவதற்கு முன்பாக ஒரு பெண் தன் துணைவரை புரிந்துகொள்ளவும் நேசிக்கவும் விரும்புகிறாள். நம்பகமான நண்பர்கள், மருத்துவர்கள் மற்றும் மனநல ஆலோசர்களின் அறிவுரைகள் உங்களுக்கு உதவும்.