Gutkha Pan Masala (Photo Credit: Wikipedia Commons)

மே 26, ஹைதராபாத் (Telangana News): உடலுக்கு பல்வேறு தீங்குகளை ஏற்படுத்தி, புற்றுநோயை வரவழைக்கும் தன்மை கொண்ட குட்கா மற்றும் பான் மசாலா (Gutkha & Panmasala) போன்ற போதைப்பொருட்களுக்கு, தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் தடை என்பது இருக்கிறது. மாநிலத்தில் வாழும் மக்களின் எதிர்கால நலன் கருதி குட்கா போன்ற பொருட்கள் விற்பனை, பதுக்கல், கடத்தல் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மீறும் நபர்களுக்கு சட்டவிதிமுறைகளின் படி நடவடிக்கையும் எடுக்கிறது. Google Maps: கூகுள் மேப்ஸின் அப்டேட்டில் அசத்தல் அம்சங்கள்; ஏஐ பயன்பாட்டுடன் மிரளவைக்கும் விஷயங்கள்.. விபரம் உள்ளே.! 

தமிழ்நாட்டில் தடை விதிப்பு: நேற்று முன்தினம் தமிழ்நாட்டில், மாநில அளவில் குட்கா, பான் மசாலா ஆகிய போதைப்பொருட்கள் விற்பனை தடைக்கான ஓராண்டுகால கட்டுப்பாடு நிறைவடைந்த நிலையில், அதனை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதனால் மே மாதம் 23ம் தேதி 2025 வரையில் குட்கா, பான் மசாலா பொருட்களுக்கான தடை என்பது தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தெலுங்கானா மாநில அரசும் குட்கா, பான் மசாலா பொருட்களுக்கான தடையை அமல்படுத்தியுள்ளது. NIMS Doctors Save Child Life: இதயத்திற்கு அருகில் சிக்கிய அம்பு; சிறுவனின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. நெகிழ்ச்சி செயல்.! 

தெலுங்கானா மாநிலத்திலும் குட்காவுக்கு தடை: அம்மாநிலத்தில் மே 24ம் தேதியுடன் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட குட்கா, பான் மசாலா பொருட்களுக்கான தடைகள் நிறைவுபெற்ற நிலையில், இன்று அத்தடையை மேலும் ஓராண்டுக்கு நீடிப்பு செய்வதாக தெலுங்கானா மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனால் அம்மாநிலத்தில் குட்கா தயாரிக்க, விற்பனை செய்ய, பதுக்கி வைக்க தடை விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு அடுத்த ஆண்டு வரை தொடரும் எனவும் அம்மாநில அரசு தனது அரசுக்குறிப்பில் தெரிவுபடுத்தியுள்ளது.