
பிப்ரவரி 12, சென்னை (Chennai News): அனைவரும் சிறுவயதிலிருந்தே தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்து வளர்த்திருப்போம். தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் தான் முடி நன்கு வளரும் என சொல்லி எண்ணெய் தேய்த்து வந்தனர். ஆனால் சமீபத்தில் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதும் முடி வளர்ச்சிக்கும் சம்பந்தம் இல்லை என சொல்லப்படுகிறது. ஆனால் தலைக்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்யும் போது தலையில் ரத்தவோட்டம் அதிகரித்து முடி வளர்ச்சி அடையும். தலைமுடிக்கு எண்ணெய் வைப்பது, முடி வறட்சி இல்லாமல் ஈரப்பதத்துடன் வைத்திருந்து முடி கொட்டுவது தவிர்க்கும்.
வெதுவெதுப்பான மசாஜ்:
ஸ்ட்ரெஸ் அதிகரிக்கும் போது லேசாக எண்ணெயை சூடு செய்து வெதுவெதுப்பாக முடியின் வேர்காளில் படும் படி மசாஜ் செய்ய வேண்டும்,. இது உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்ய வைக்கும்.
வெதுவெதுப்பான எண்ணெய்யில் மசஜ் செய்ததும் சூடான தண்ணீரில் டவலை முக்கி பிழிந்துகொண்டு, அந்த டவலை தலை சுற்றி நன்கு கட்டி வைத்துக் கொள்ளலாம். பின் அரை மணி நேரத்திற்கு பின் குளிக்கலாம். இது முடியின் வளர்ச்சியைத் தூண்டும். Sani Peyarchi Palan 2025: சனிப் பெயர்ச்சி 2025: சிம்ம ராசிக்கு ஏழரை சனி எப்படி இருக்கப் போகுது தெரியுமா? விபரம் உள்ளே.!
கவனிக்க வேண்டியவை:
வெளியில் செல்லும் போது வெப்பம், மாசு, வியர்வை அனைத்து ஏற்படுவதால், தலைமுடி பாதிப்படையும். இது போன்று நேரங்களில் தலைக்கு எண்ணெய் வைக்க கூடாது. எண்ணெய் அழுக்குகளுடன் சேர்ந்து தலையில் இருப்பதால் முடிகள் பலவீனமடைந்து கொட்டும் அல்லது உடைந்து போகக்கூடும். கோடை மற்றும் மழைகாலங்களில் தலைக்கு குளித்து விட்டு வந்ததும், முடியை நன்கு உலர வைத்த பின் சுத்தமான தலையில் எண்ணெய் வைக்க வேண்டும்.
தலையில் எண்னெய் வைத்து மசாஜ் செய்வது முடி வளர்ச்சியைத் தூண்டும். அதற்காக முடியை எண்ணெய் பாத்திரத்தில் முக்கியது போன்று ஊற்றக்கூடாது. அதிக எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வது முடிகளை பலவீனப்படுத்தும். மேலும் முடிகள் சோர்வடைந்துவிடும். வளர்ச்சியும் தடைபடும். மெலும் இதை போக வைக்க அதிக ஷாம்பு பயன்படுத்த வேண்டும். இது முடிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். எண்ணெய் தேய்த்து முடிகள் விரலோடு வரும் படி மசாஜ் செய்யக் கூடாது. லேசாக மென்மையாக விரல் நுனிகளை மட்டும் பயன்படுத்தி வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். இது முடிகளின் வளர்ச்சியைத் தூண்டும். கட்டாயம் வாரத்திற்கு ஒரு முறையாவது முடிக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும்.