ஏப்ரல் 30, சென்னை (Health Tips): கோடைகாலத்தில் நாம் அதிகமாக சாப்பிட கூடிய வெள்ளரிக்காயில் (Cucumber) அதன் இலை, பூ, வேர் என அனைத்தும் மருந்தாக பயன்படுகிறது. மேலும், விதையை எடுத்துவிட்டு சதையை நன்கு அரைத்து சாப்பிடலாம். தோலில் உள்ள கருமை நிறம், சருமத்தில் உள்ள முகப்பரு, வயிறு மற்றும் மாதவிலக்கு பிரச்னைகள், கருமுட்டை கட்டி ஆகியவற்றால் ஏற்படும் மாதவிலக்கு கோளாறு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட வெள்ளரிக்காய் நல்ல மருந்தாக உள்ளது. Husband Arrested For Killing Wife: மனைவியை கொன்றுவிட்டு அடக்கம் செய்ய ஏற்பாடு; கணவரை கைது செய்த காவல்துறையினர்..!

வெள்ளரிச் செடியின் இலையை 30 மில்லி லிட்டர் அளவு சாறு எடுத்து சாப்பிட்டு வந்தால், இந்த பிரச்னைகள் அனைத்தும் தீரும். மேலும், ஆண்களின் உயிரணுக்கள் உற்பத்தி அதிகரித்து, அதற்கான சிறந்த தீர்வை அளிக்கும். கிரேக்கம் மற்றும் ரோமானியர்கள் வெள்ளரிக்காயை (Vellarikai) அழகு சாதன பொருட்களுக்கும் பயன்படுத்தி வந்துள்ளனர். இதனை அரைத்து முகத்தில் பூசிவிட்டு அரை மணி நேரம் கழித்து, வெந்நீரில் குளித்து வந்தால் கோடைகாலத்தில் ஏற்படக்கூடிய சரும வறட்சி நீங்கும்.

மஞ்சள் நிறத்தில் சிறுநீர் மற்றும் பசியின்மை போன்ற பிரச்னைக்கு மிகப்பெரிய மருந்தாக உள்ளது. வெள்ளரிக்காயின் சதைப் பகுதியை எடுத்து 100 மில்லி லிட்டர் மோரில் கலந்து காலை, மதியம் என பருகி வர மஞ்சள் காமாலை நோய் சரியாகும். பித்தப்பை கற்கள் இருந்தால், வெள்ளரிக்காய் சதைப்பகுதியை மட்டும் 20 கிராம் அளவில் எடுத்துக்கொண்டு 200 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்து குளிர்பானமாக பருகலாம். இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல பலனை அளிக்கும். இதன் வேர் சொரியாசிஸ் நோய்க்கு நல்ல தீர்வாகும். 20 கிராம் அளவு இதனை எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் பருகி வந்தால், இந்த நோயின் அரிப்புத்தன்மை குறைந்துவிடும்.