மே 19, சென்னை (Chennai): கோடைகாலம் தொடங்கிவிட்டால் மக்கள் வெயில் மற்றும் அது சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்ள தொடங்கிவிடுவார்கள். இந்தியாவில் மார்ச் மாதத்தின் இடையில் இருந்து ஜூன் மாதம் வரை கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைக்கும். மே மாதத்தின் இறுதியில் கேரளாவில் இந்தியாவுக்கே மிகப்பெரிய மழைபொழிவை ஏற்படுத்தும் தென்மேற்கு பருவக்காற்று காலம் தொடங்கிவிடும் என்பதால், ஜூன் மாதத்திற்கு பின் பரவலான வெப்பத்தின் அளவு குறையும்.
வியாபார நோக்கத்துடன் கெமிக்கல் கலக்கப்படும் தர்பூசணி (Watermelon Adulteration): வெயிலின் தாக்கத்தினால் மக்கள் உடல் சூடு அதிகரிப்பு, தாகம், மயக்கம் என உடல் நீரிழப்பு பிரச்சனைகளை எதிர்கொள்வது இயல்பானது. வெயில் தாக்கத்தில் இருந்து தங்களை மக்கள் காத்துக்கொள்ள இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், நுங்கு, பழைய கஞ்சி நீர், பழச்சாறுகள் ஆகியவற்றை அதிகம் விரும்பி குடிப்பார்கள். இந்நிலையில், தர்பூசணி பழங்களை விற்பனை செய்வோர் வியாபார நோக்கத்துடன் பழுக்காத தர்பூசணியில் ஊசியை செலுத்தி சிவந்த நிறத்திற்கு மாற்றி விற்பனை செய்வது நடைபெறுகிறது. Narasimha Jayanthi 2024: விஷ்ணுவின் அவதாரத்தில் மிக முக்கியமானது நரசிம்ம அவதாரம்; முக்கியத்தும் என்ன? ஆன்மீக நெஞ்சங்களே தெரிஞ்சிக்கோங்க.!
உணவு பாதுகாப்புத்துறையின் விழிப்புணர்வு: இதனை கண்டறிவதற்கு எளிய முறை ஒன்று உள்ளது. அதனை இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையமும் (The Food Safety Standards Authority of India FSSAI) தெளிவுபடுத்தி இருக்கிறது. அதாவது, தர்பூசணி புழங்கும் வாங்கும்போது அல்லது வாங்கிய பின்னர், அதனை இரண்டாக வெட்டி பஞ்சு ஒன்றை எடுத்துக்கொண்டு தர்பூசணியின் மீது ஒத்தி எடுத்தால், சிவந்த நிறம் ஒட்டிக்கொண்டால் அதனுள் ஊசி வைத்து சிகப்பு சாயம் ஏற்றப்பட்டுள்ளது என அர்த்தம். அதுவே இயற்கையாக பழம் பழுது இருந்தால் சிவந்த நிறம் என்பது ஒட்டாது. இதனை செயல்முறை அர்த்தமாக கீழுள்ள வீடியோவிலும் நீங்கள் கண்டறிந்து தெளிவடையாளம்.