Termite (Photo Credit: Pixabay)

மே 20, சென்னை (Chennai): கரையான் புற்று என்று சொல்லுவார்கள் அல்லவா? அந்த மண்ணைப் பற்றி தான் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதை நம்முடைய ஊர்களில் பாம்பு புற்று என்று சொல்லுவார்கள். இது பாம்பு கட்டும் புற்று அல்ல. கரையான்கள் சேர்ந்து கட்டும் புற்றில், பாம்பு வந்து குடி கொள்ளும். இந்த புற்று மண்ணால் (Termite Soil) பல பயன்கள் உள்ளன. அவற்றினைப் பற்றி இப்பதிவில் நாம் காணலாம். Sewage Dumped On Road Side: சாலையில் கொட்டப்பட்டுள்ள கழிவுகள்.. பொதுமக்கள் அகற்ற கோரிக்கை..!

புற்றுமண்ணின் பயன்கள்:

  • பாரம்பரியக் குளியலில் முக்கியமானதாக மண்குளியல் இருந்துள்ளது. இது இயற்கை மருத்துவத்தில் ஒரு சிகிக்சை முறையாகவும் உள்ளது. உடல் சூடு மற்றும் சருமம் பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது.
  • தற்போது அழகு நிலையங்களில் மண்ணை ஃபேசியலுகு பயன்படுத்துகிறார்கள். இதிலுள்ள தாதுக்கள் இறந்த செல்கள், அழுக்கு, எண்ணை தன்மை ஆகியவற்றை நீக்கி சருமத்தை தெளிவாக்கி, பொழிவாக்குகிறது.
  • கரையான் புற்றுமண் அடிப்பட்ட வீக்கங்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. யானைக்கால் நோய்க்கு இம்மண்னைக் கொண்டு மருந்து போட்டுக் கட்டுவதால் நல்ல பலன் கிடைக்கும்.
  • சுத்தமான புற்றுமண்ணில் உப்பு, உவர் சுண்ணாம்பு, கந்தகம், மைக்கா, போன்றவை இல்லாததால் சிகிச்சைக்கு சிறந்ததாக உள்ளது.