Sports Bra (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 25, சென்னை (Chennai News): ஜிம் அல்லது வொர்க் அவுட் செய்யும் போது எந்த வகையான ஆடைகள் பொருத்தமாக இருக்கும் எதை தேர்வு செய்து பயன்படுத்தலாம் என்று பலருக்கும் தெரிவதில்லை. கடைகளில் கிடைக்கும் பார்க்க கண்களை கவரும் வகையில் இருந்தால் அதில் ஏதோ ஒன்றை, அதன் தரம் பற்றி கூட யோசிக்காமல் வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆரம்பத்தில் நன்றாக இருக்கும் இவ்வாடைகள் நாட்கள் செல்ல செல்ல அதில் வியர்வை படிவதாலும் தரமற்று இருப்பதாலும் உடலில் பூஞ்சை தொற்று ஏற்பட்டு சருமத்தையும் உள்ளுறுப்புகளையும் பாதிக்கிறது. அரிப்பு, வீக்கம், காய்ங்கள் கூட ஏற்படும். சரியாக தேர்வு செய்து ஜிம் மற்றும் அல்லது வொர்க் அவுட் டிரஸை கவனமாக வாங்க வேண்டும்.

உடற்பயிற்சியில் ஈடுபடும் போதும் ஜிம்களுக்கு செல்லும் போதும் அதற்கேற்ப ஆடை அணிவது உடலுக்கு மிக நல்லது. பலரும் இறுக்கமான ஆடைகள் அணிவதால் அதிகளவில் வியர்வை வெளியாகி எடையை உடனடியாக குறைக்க முடியும் என நினைக்கின்றனர். ஆனால் மாறாக இது உடலில் பக்க விளைவுகளையே ஏற்படுத்துகிறது. இறுக்கமான ஆடைகள் சதைகளில் அதிக வலியை ஏற்படுத்தக் கூடும்.

உடற்பயிற்சி செய்ய சற்று தளர்வான ஆடைகள் அணிவது தான் சிறந்தது. மேலும் உடலுக்கு நெகிழ்வு தன்மையளிக்கும் உடைகளும் அணிந்து கொள்ளலாம். Hair Smoothening: வீட்டிலே ஹேர் ஸ்மூத்னிங்.. அசத்தல் டிப்ஸ் இதோ.!

சுவாசிக்கும் ஆடைகள்:

காட்டன் ஆடைகள் வியர்வையை உறிஞ்சி கொள்ளும் தன்மையுடையது என்றாலும் உடற்பயிற்சி செய்யும் போது உடலுடன் ஒட்டுவது சில அசௌகரியத்தை தரலாம். அதனால் காட்டான் கலந்த பிற க்ளாத்தில் ஜிம் ஆடைகளை வாங்கலாம். பாலிஸ்டர் காட்டன் கலந்த ஆடைகள் பொருத்தமானதாக இருக்கும். டேன்க் டாப், ஸ்போர்ட்ஸ் வியர், காட்டன் டி ஷர்ட், ட்ராக் பேண்ட், போன்ற ஆடைகளை தேர்வு செய்யலாம்.

உடற்பயிற்சிக்கென பிரத்யேகமாக தயாரிக்கும் ஆடைகளை தேர்வு செய்யலாம். இது உடலுக்கு தகுந்த காற்றோட்டத்தை அளிக்கும் வகையில் இருக்கும். தண்ணீரை உறிஞ்சாத ஆடைகளை தவிர்ப்பது நல்லது. இது ஆடைகள் வாங்குபவர்கள் அதை தொடர்ச்சியாக பயன்படுத்தாமல் சுத்தப்படுத்தி வெயிலில் போட்டு காயப்படுத்திப் பயன்படுத்தலாம். ரப்பர், பிளாஸ்டிக் போன்ற துணிகளை தவிர்ப்பது நல்லது.

அளவுடைய ஆடை:

உடலுக்கு ஏற்ற அளவுடைய ஆடைகளை அணிய வேண்டும். மிக லூசாக இருந்தாலும் அல்லது மிக டைட்டாக இருந்தாலும் அது உடற்பயிற்சியில் இடையூறாக இருக்கும். லூசான ஆடைகள் அணிவதால் உடற்பயிற்சி செய்யும் போது உடலின் அமைப்பு மாறவும் வாய்ப்புள்ளது. அதனால் சரியாக பொருந்தும் ஆடைகளைதேர்வு செய்வது நல்லது.

ஜிம்மிற்கு செல்லும் பலரும் உடலை அழகாகவும் ஆரோக்கியமாக் இருக்க வேண்டும் என நினைத்து செல்கிறார்களோ இல்லையோ நிச்சயம் அனைவரும் ரீல்ஸ் செய்யவும் செல்ஃபிகாவும் செல்கின்றனர். அதனால் சீசனுக்கு ஏற்ப ஆடைகளை தேர்வு செய்து வாங்கலாம்.

ஆடையில் செலுத்தும் கவனத்தை கண்டிப்பாக ஷூ மற்றும் சாக்ஸ்களிலும் செலுத்த வேண்டும். தங்களின் பயிற்சியாளரின் ஆலோசனைப்படி, ஆடையை தேர்வு செய்வது மிக நல்லது.