
மார்ச் 03, சென்னை (Chennai News): கோவைக்காயை சாகுபடி செய்தால் தொடர்ச்சியாக 4 ஆண்டுகளுக்கு நல்ல மகசூல், லாபம் பார்க்கலாம். சமீபகாலமாக இதன் தேவை அதிகரித்து வருவதால் தாரளமாக விவசாயிகள் இதை பயிரிடலாம் என்று கூறுவதுடன் கோவைக்காய் சாகுபடி பற்றியும் விளக்குகின்றனர் தர்மபுரியைச் சேர்ந்த விவசாயி வேடியம்மாள் மற்றும் அவரின் மருமகன் ஸ்ரீனிகுமார்.
கோவைக்காய் சாகுபடி:
தென் மாவட்டங்களில் அதிகமாக கோவைக்காயை முதன்மை பயிராகவும், ஊடுபயிராகவும் வளர்க்கின்றனர். தங்களுக்கு இருக்கும் இரண்டரை ஏக்கர் நிலத்தில் 60 சென்டில் முதன்மை பயிராக நடவு செய்திருக்கிறார்கள். சுற்று வட்டாரப்பகுதிகளில் தென்னை, வாழை, போன்றவை முதன்மை பயிராக இருப்பதால் இதனை விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்தது. பின்னரே இதை நடவு செய்து கடந்த இரண்டு வருடங்களாக மகசூல் ஈட்டி வருவதாக தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கூறுகையில், ஆரம்பத்தில், 60 செண்ட்டுக்கு தேவையான 540 நாற்றுகளை தலா ரூபாய் 15 வீதம் தேனி மாவட்டத்திலிருந்து வாங்கிவந்து நடவு செய்தோம். மேலும் பந்தல் அமைக்க ஒரு லட்சம் வரை செலவாயிற்று ஒரு முறை பந்தல் அமைத்தால் பல வருடங்களிற்கு இதையே பயன்படுத்திக் கொள்ளலாம். நாற்றுகள் அருகிலேயே கிடைத்தால் போக்குவரத்து செலவுகளை குறைக்க முடியும் என அறிவுரையும் வழங்குகிறார்.
60 சென்ட் நிலத்தில் சாகுபடி செய்வதால் மாதத்தில் 4 முதல் 5 முறை அறுவடை செய்து தரம் பிரித்து விற்பனை செய்கிறோம். முதல் தரத்திற்கு 25 முதல் 45 ரூபாய் வரைக்கும், இரண்டாம் தரத்திற்கு ரூபாய் 15 முதல் 25 என்ற விலையில் விற்பனை செய்கிறோம். சில்லறை வியாபாரத்தை மட்டுமே வராத்திற்கு ஒரு கிலோவிற்கு சராசரியாக 25 ரூபாய் வீதம், 400 கிலோவிற்கு விற்பனையாகிறது இதனால் வாரத்திற்கு 10,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. மாதத்திற்கு பராமரிச்செலவுகள், பறிப்புக்கூலி போக மீதம் 32000 லாபம் கிடைக்கிறது என்கிறார் ஸ்ரீனிகுமார். Red Light Areas In India: பாலியல் தொழிலை முதன்மை தொழிலாக கொண்டவர்கள்.. விவரம் இதோ..!
கோவைக்காய் சாகுபடி பற்றி விவரிக்கிறார் வேடியம்மாள். கோவைக்காய்க்கு சவுடு மண் சிறந்ததாக உள்ளது. எந்த பருவத்தில் வேண்மானலும் நடவு செய்யலாம். முதலில் நிலத்தை உழுது பந்தால் அமைத்து ஒரு கனஅடி அளவிற்கு குழிவெட்டி எடுக்க வேண்டும். அடியுரமாக ஒரு கிலோ எருவும், 100 கிராம் வேப்பம் புண்ணாக்கும் கலந்து குழியில் இட்டு, நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.
வேர் படர தொடங்கியதும், மேலுரமாக 15 நாட்களுக்கு ஒரு முறை 15 லிட்டர் தண்ணீரில், 200மி.லி வீதம் மீன் அமிலம் கலந்து தெளிக்க வேண்டும். 20 நாட்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் தண்ணீரில் 5லிட்டர் மீன் அமிலம் கலந்து பாசன நீரில் விட வேண்டும். இதே போல் 25 நாட்களுக்கு ஒரு முறை பாசனநீரில் 200லி ஜீவாமிர்தம் கலந்து பாசன நீரில் விட வேண்டும். 30 நாட்களுக்கு ஒரு முறை 15 லிட்டர் தண்ணீரில் 200 மி.லி வேஸ்ட் டீ கம்போஸர் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். மகசூல் கிடைக்கத் தொடங்கிய பிறகு, 35 நாள்களுக்கு ஒரு முறை 100 லிட்டர் தண்ணீரில் 20 லிட்டர் செறிவூட்டப்பட்ட கடலைப்பிண்ணாக்கு கரைசல் கலந்து வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும். பூச்சிகள் தென்பட்டால், 15 லிட்டர் தண்ணீருக்கு 500 மி.லி வீதம் மூலிகைப் பூச்சிவிரட்டி கலந்து தெளிக்கலாம். நடவு செய்ததிலிருந்து 60 நாட்களில் மகசூல் கிடைக்க ஆரம்பித்துவிடும். ஒரு முறை நடவு செய்தால் நான்கு ஆண்டுகளுக்கு நிலையான மகசூல் கிடைக்கும். அதன் பிறகு மீண்டும் புதிதாக நடவு செய்து கொள்ளலாம்.
செறிவூட்டப்பட்ட கடலைப்பிண்ணாக்குக் கரைசல்:
10 கிலோ காடலைப்பிண்ணாக்கு, 2 கிலோ வெல்லம், கனிந்த 10 வாழைப்பழங்கள் ஆகியவற்றை 20 லிட்டர் தண்ணீரில் போட்டு கலந்து மூடி வைக்க வேண்டும். இது மூன்று நாட்களில் புளித்து செறிவூட்டப்பட்ட கடலைப்பிண்ணாக்காக தயாரகிவிடும்.